தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்கண்டது சோதி கருத்து ளிருந்திடக்கொண்டது வோராண்டு கூடி வருகைக்குவிண்ட வௌகாரம் விளங்கின வென்றே.
உரைmeaning
பாடல் #1409 இல் உள்ளபடி, முப்பத்தாறு சக்திகளும் நெருங்கி நிற்கின்ற இறைவியே, சாதகரின் அறிவு முழுவதும் நிறைந்திருக்கின்ற அக்னியாகவும், அந்த அக்னிக்குள் தரிசிக்கின்ற வடிவமே ஜோதியாகவும் இருக்கிறாள் என்று பாடல் கூறுகிறது. இதைத் தமது கருத்திற்குள் வைத்து இடைவிடாமல் தியானத்தில் இருந்தால், பாடல் #1406 இல் உள்ளபடி ஆகாயம் முழுவதும் பரந்து விரிந்திருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள 'ஔம்' எனும் பீஜ மந்திரத்தின் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1409 says, the Goddess, close to whom the thirty-six powers stand, is herself the fire that fills the practitioner's understanding entirely, and the form beheld within that fire is itself the flame, the verse declares. If one holds this within thought and remains unceasingly in meditation, one may come to understand the inner meaning of the seed mantra 'Aum', found in the Nine-Letter Chakra that spreads throughout the sky, as in verse 1406, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1409 இல் உள்ளபடி, முப்பத்தாறு சக்திகளும் நெருங்கி நிற்கின்ற இறைவியே, சாதகரின் அறிவு முழுவதும் நிறைந்திருக்கின்ற அக்னியாகவும் இருக்கிறாள்.
As verse 1409 says, the Goddess, close to whom the thirty-six powers stand, is herself the fire that fills the practitioner's understanding entirely.
- வரி 2Line 2
அந்த அக்னிக்குள் தரிசிக்கின்ற வடிவமே ஜோதியாகவும் இருக்கிறாள்.
The form beheld within that fire is itself the flame.
- வரி 3Line 3
இதைத் தமது கருத்திற்குள் வைத்து இடைவிடாமல் தியானத்தில் இருக்கவேண்டும்.
One must hold this within thought and remain unceasingly in meditation.
- வரி 4Line 4
பாடல் #1406 இல் உள்ளபடி ஆகாயம் முழுவதும் பரந்து விரிந்திருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள 'ஔம்' எனும் பீஜ மந்திரத்தின் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும்.
One may then come to understand the inner meaning of the seed mantra 'Aum', found in the Nine-Letter Chakra that spreads throughout the sky, as in verse 1406.
திருமந்திரம் பாடல் #1410





