தொடர்ந்து படிக்கread this section continuously
விளங்கிடும் வானிடை நின்றவை யெல்லாம்வணங்கிடு மண்டல மன்னுயி ராகநலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.
உரைmeaning
பாடல் #1410 இல் உள்ளபடி, நவாக்கிரி சக்கரத்தில் உள்ள 'ஔம்' எனும் பீஜ மந்திரத்தின் உட்பொருளை விளங்கிக்கொண்ட சாதகருக்கு, ஆகாயத்தின் நடுவில் நிற்கின்ற அனைத்துத் தத்துவங்களும் விளங்கிவிடும் என்று பாடல் கூறுகிறது. அவரை வணங்கிடும் இடத்திலெல்லாம் வாழுகின்ற உயிர்கள் ஆகவே, அவரும் அங்கு இருந்து நலம் தரும் பல விஷயங்களை வெளிக்கொண்டுவந்து, அதன் மூலம் அந்த உயிர்களுக்குப் பலவிதமான நன்மைகளைச் செய்கிறார். நரனாக (மனிதனாக) இருந்தும் அனைத்துமாகவே தானும் இருந்து காக்கும் தொழில் புரியும் திருமாலைப் போலவே, உலகத்திலுள்ள அனைத்தும் தமக்குள்ளேயே இருக்க, அதற்கு நடுவில் நின்றுகொண்டு அவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவும் முடியும் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1410 says, for the practitioner who has understood the inner meaning of the seed mantra 'Aum' in the Nine-Letter Chakra, all the principles that stand at the middle of the sky become understood, the verse declares. Since the souls who live wherever he is worshipped become, in effect, himself, he too abides there and brings forth many beneficial things, doing many kinds of good for those souls through them. And, like Thirumal, who though being everything performs the function of protection while yet remaining human, everything in the world stands within him too, and he is able to stand at the centre of it all and speak of it, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1410 இல் உள்ளபடி, நவாக்கிரி சக்கரத்தில் உள்ள 'ஔம்' எனும் பீஜ மந்திரத்தின் உட்பொருளை விளங்கிக்கொண்ட சாதகருக்கு, ஆகாயத்தின் நடுவில் நிற்கின்ற அனைத்துத் தத்துவங்களும் விளங்கிவிடும்.
As verse 1410 says, for the practitioner who has understood the inner meaning of the seed mantra 'Aum' in the Nine-Letter Chakra, all the principles that stand at the middle of the sky become understood.
- வரி 2Line 2
அவரை வணங்கிடும் இடத்திலெல்லாம் வாழுகின்ற உயிர்கள் ஆகவே, அவரும் அங்கு இருந்து நலம் தரும் பல விஷயங்களை வெளிக்கொண்டுவருகிறார்.
Since the souls who live wherever he is worshipped become, in effect, himself, he too abides there and brings forth many beneficial things.
- வரி 3Line 3
அதன் மூலம் அந்த உயிர்களுக்குப் பலவிதமான நன்மைகளைச் செய்கிறார்.
Through them, he does many kinds of good for those souls.
- வரி 4Line 4
நரனாக இருந்தும் அனைத்துமாகவே தானும் இருந்து காக்கும் தொழில் புரியும் திருமாலைப் போலவே, உலகத்திலுள்ள அனைத்தும் தமக்குள்ளேயே இருக்க, அதற்கு நடுவில் நின்றுகொண்டு அவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவும் முடியும்.
And, like Thirumal, who though being everything performs the function of protection while yet remaining human, everything in the world stands within him too, and he is able to stand at the centre of it all and speak of it.
திருமந்திரம் பாடல் #1411





