தொடர்ந்து படிக்கread this section continuously
ஆமே யதோமுக மேலே யமுதமாய்த்தானே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனுங்காமேல் வருகின்ற கற்பக மானதுபூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.
உரைmeaning
பாடல் #1411 இல் உள்ளபடி, உலகத்திலுள்ள அனைத்தையும் தமக்குள்ளேயே நின்று இருக்க, அவற்றை எடுத்துச் சொல்ல முடிந்த சாதகர், இறைவனின் கீழ் நோக்கி இருக்கும் ஆறாவது முகமான அதோமுகம் போல் உலகத்தைத் தாங்கிக்கொண்டு இருப்பவராகவும், அதற்கு மேலே இருக்கின்ற அமிழ்தமாகவும், அனைத்தையும் காக்கின்ற ஓங்காரத்தின் உகாரத் தத்துவமாகவும், சிறப்பாக எழுந்துவந்து உயிர்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் அமைதியைக் கொடுக்கும் சந்திரனாகவும் இருக்கிறார் என்று பாடல் கூறுகிறது. தமது உடலுக்கு மேலே வந்து கேட்டது அனைத்தும் கொடுத்தருளும் கற்பகத் தருவாகவும், பூமியின் மேல் வருகின்ற அனைத்து உலகங்களையும் இணைக்கின்ற தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாகவும் இருக்கிறார் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1411 says, the practitioner, who could stand within himself as everything in the world and speak of it, becomes one who bears up the world like the Lord's downward-facing sixth face, Adhomukha, becomes the nectar above it, becomes the principle of the letter U within Om that protects everything, and especially becomes the moon that rises and grants a cooling peace to souls, the verse declares. He becomes the wish-granting tree that comes above his own body and graciously grants all that is asked of it, and becomes the golden shining creeper that unites all the worlds that come upon the earth, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1411 இல் உள்ளபடி, உலகத்திலுள்ள அனைத்தையும் தமக்குள்ளேயே நின்று இருக்க அவற்றை எடுத்துச் சொல்ல முடிந்த சாதகர், இறைவனின் கீழ் நோக்கி இருக்கும் ஆறாவது முகமான அதோமுகம் போல் உலகத்தைத் தாங்கிக்கொண்டு இருப்பவராக இருக்கிறார்.
As verse 1411 says, the practitioner, who could stand within himself as everything in the world and speak of it, becomes one who bears up the world like the Lord's downward-facing sixth face, Adhomukha.
- வரி 2Line 2
அதற்கு மேலே இருக்கின்ற அமிழ்தமாகவும், அனைத்தையும் காக்கின்ற ஓங்காரத்தின் உகாரத் தத்துவமாகவும் இருக்கிறார்.
He becomes the nectar above it, and becomes the principle of the letter U within Om that protects everything.
- வரி 3Line 3
சிறப்பாக எழுந்துவந்து உயிர்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் அமைதியைக் கொடுக்கும் சந்திரனாகவும், தமது உடலுக்கு மேலே வந்து கேட்டது அனைத்தும் கொடுத்தருளும் கற்பகத் தருவாகவும் இருக்கிறார்.
He especially becomes the moon that rises and grants a cooling peace to souls, and becomes the wish-granting tree that comes above his own body and graciously grants all that is asked of it.
- வரி 4Line 4
பூமியின் மேல் வருகின்ற அனைத்து உலகங்களையும் இணைக்கின்ற தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாகவும் இருக்கிறார்.
He becomes the golden shining creeper that unites all the worlds that come upon the earth.
திருமந்திரம் பாடல் #1412





