தொடர்ந்து படிக்கread this section continuously
பொற்கொடி யாளுடன் பூசனை செய்திடவக்களி யாகிய வாங்காரம் போய்விடுமற்கடி யாகிய மண்டலந் தன்னுளேபிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.
உரைmeaning
பாடல் #1412 இல் உள்ளபடி, தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாக இருக்கின்ற இறைவியோடு சாதகர் எப்போதும் சேர்ந்தே இருந்து பூஜைகள் செய்துகொண்டு இருக்கும்போது, 'இறைவி என்னோடு இருக்கிறாள்' என்கிற இன்பமான எண்ணமாகிய அகங்காரம் சாதகரை விட்டு விலகிவிடும் என்று பாடல் கூறுகிறது. அதன்பிறகு, சாதகரைச் சுற்றிக் காவலாக நிலைபெற்று நிற்கின்ற மண்டலத்திற்கு உள்ளேயே சாதகரோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்ற கொடியாகவும் குழந்தை போலவும் இருக்கின்ற இறைவியைத் தமக்குள்ளே சாதகரால் தரிசிக்க முடியும் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1412 says, when the practitioner, ever joined together with the Goddess who is the golden shining creeper, continually performs worship, the joyful thought that is his ego, thinking 'the Goddess is with me', departs from him, the verse declares. After that, within the mandala that stands as a fixed guard around the practitioner, he becomes able to behold within himself the Goddess, who stands entwined together with him as a creeper and appears like a child, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1412 இல் உள்ளபடி, தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாக இருக்கின்ற இறைவியோடு சாதகர் எப்போதும் சேர்ந்தே இருந்து பூஜைகள் செய்துகொண்டு இருக்கிறார்.
As verse 1412 says, the practitioner is ever joined together with the Goddess who is the golden shining creeper, continually performing worship.
- வரி 2Line 2
அப்போது 'இறைவி என்னோடு இருக்கிறாள்' என்கிற இன்பமான எண்ணமாகிய அகங்காரம் சாதகரை விட்டு விலகிவிடும்.
Then the joyful thought that is his ego, thinking 'the Goddess is with me', departs from him.
- வரி 3Line 3
அதன்பிறகு, சாதகரைச் சுற்றிக் காவலாக நிலைபெற்று நிற்கின்ற மண்டலத்திற்கு உள்ளேயே,
After that, within the mandala that stands as a fixed guard around the practitioner,
- வரி 4Line 4
சாதகரோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்ற கொடியாகவும் குழந்தை போலவும் இருக்கின்ற இறைவியைத் தமக்குள்ளே சாதகரால் தரிசிக்க முடியும்.
he becomes able to behold within himself the Goddess, who stands entwined together with him as a creeper and appears like a child.
திருமந்திரம் பாடல் #1413





