தொடர்ந்து படிக்கread this section continuously
பேதை யிவளுக்குப் பெண்மை யழகாகுந்தாதை யிவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்மாதை யிவளுக்கு மண்ணுந் திலதமாய்க்கோதையர் சூழக் குவிந்திடுங் காணுமே.
உரைmeaning
பாடல் #1413 இல் உள்ளபடி, குழந்தை போல இருக்கின்ற இந்த இறைவிக்குச் சக்தியின் பரிபூரணமே பேரழகாக இருக்கிறது என்று பாடல் கூறுகிறது. அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவனும் இறைவிக்கு உறுதுணையாக நிற்கிறார். இறைவனோடு சரிபாதியான பெண் பாகமாய் இருக்கும் இறைவிக்கு, அழகாகப் பூசிய குங்குமத் திலகம் போலவே நடுவில் அரசி போல் வீற்றிருக்க, மலர்களைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய சக்திகள் அனைவரும் அவளைச் சுற்றி ஒன்றாகக் கூடி இருப்பதைச் சாதகரால் தரிசிக்க முடியும் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1413 says, for this Goddess who appears like a child, the very fullness of power is itself her great beauty, the verse declares. The Lord, who is father to all souls, also stands as her sure support. For the Goddess, who is the equal female half joined with the Lord, the practitioner is able to behold her standing at the centre like a queen, like a beautifully applied kumkum tilak, while all the powers, with their beautiful hair adorned with flowers, gather together around her, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1413 இல் உள்ளபடி, குழந்தை போல இருக்கின்ற இந்த இறைவிக்குச் சக்தியின் பரிபூரணமே பேரழகாக இருக்கிறது.
As verse 1413 says, for this Goddess who appears like a child, the very fullness of power is itself her great beauty.
- வரி 2Line 2
அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவனும் இறைவிக்கு உறுதுணையாக நிற்கிறார்.
The Lord, who is father to all souls, also stands as her sure support.
- வரி 3Line 3
இறைவனோடு சரிபாதியான பெண் பாகமாய் இருக்கும் இறைவிக்கு, அழகாகப் பூசிய குங்குமத் திலகம் போலவே நடுவில் அரசி போல் வீற்றிருக்கிறாள்.
The Goddess, who is the equal female half joined with the Lord, stands at the centre like a queen, like a beautifully applied kumkum tilak.
- வரி 4Line 4
மலர்களைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய சக்திகள் அனைவரும் அவளைச் சுற்றி ஒன்றாகக் கூடி இருப்பதைச் சாதகரால் தரிசிக்க முடியும்.
The practitioner is able to behold all the powers, with their beautiful hair adorned with flowers, gathered together around her.
திருமந்திரம் பாடல் #1414





