திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1415

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

குவிந்தன சத்திகள் முப்பத் திருவர்நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்பரந்தித ழாகிய பங்கயத் துள்ளேயிருந்தனர் காணு மிடம்பல கொண்டே.

உரை

பாடல் #1414 இல் உள்ளபடி, இறைவியைச் சுற்றி ஒன்றாகக் கூடியிருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்திரண்டு பேர் இருக்கிறார்கள் என்று பாடல் கூறுகிறது. இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இயங்குகின்ற, என்றும் இளமையுடன் இருக்கின்ற கன்னிகளாக, நான்கு திசைகளுக்கும் எட்டெட்டு பேராக மொத்தம் முப்பத்திரண்டு பேர்களாக இறைவியைச் சுற்றி இருக்கிறார்கள். தாமரை மலரான இறைவியின் செயல்களான இதழ்களில் இந்த முப்பத்திரண்டு சக்திகளும் ஒன்றாகச் சேர்ந்து, அண்டசராசரங்கள் முழுவதும் பரந்து விரிந்து புரிகின்ற அனைத்துச் செயல்களையும், சாதகர் தாம் அமர்ந்த இடத்திலிருந்தே தமக்குள் தரிசிக்க முடியும் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1414 இல் உள்ளபடி, இறைவியைச் சுற்றி ஒன்றாகக் கூடியிருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்திரண்டு பேர் இருக்கிறார்கள்.

  • வரி 2

    இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இயங்குகின்ற, என்றும் இளமையுடன் இருக்கின்ற கன்னிகளாக, நான்கு திசைகளுக்கும் எட்டெட்டு பேராக இறைவியைச் சுற்றி இருக்கிறார்கள்.

  • வரி 3

    தாமரை மலரான இறைவியின் செயல்களான இதழ்களில் இந்த முப்பத்திரண்டு சக்திகளும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள்.

  • வரி 4

    அண்டசராசரங்கள் முழுவதும் பரந்து விரிந்து புரிகின்ற அனைத்துச் செயல்களையும், சாதகர் தாம் அமர்ந்த இடத்திலிருந்தே தமக்குள் தரிசிக்க முடியும்.

திருமந்திரம் பாடல் #1415

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout