திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1416

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கொண்டங் கிருந்தனர் கூத்த னொழியினைக்கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளதுபண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமாமின்றென் மனத்துள்ளே யில்லடைந் தாளுமே.

உரை

பாடல் #1415 இல் உள்ளபடி, உலகச் செயல்களைப் புரிந்துகொண்டு பலவிதமான இடங்களில் இறைவியோடு சேர்ந்தே இருக்கின்ற முப்பத்திரண்டு சக்திகளும், ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனின் பேரொளி வடிவத்தையே தரிசித்துக்கொண்டு, அந்தந்த இடங்களிலிருந்து உலக நன்மைக்கான காரணத்திற்காக இறைவிக்கு உள்ளேயிருந்து அவற்றைச் செயல்பட வைக்கிறார்கள் என்று பாடல் கூறுகிறது. ஆதிகாலத்திலேயே அனைத்து உயிர்களும் இறைவனை அறிந்துகொண்டு அவனைத் தேடி அடையவேண்டும் என்ற காரணத்தால் அருளப்பட்ட வேதங்களை, அண்டசராசரங்கள் முழுவதும் பரவும்படி எடுத்துச்சென்று, அங்கெல்லாம் இருக்கின்ற உயிர்களில் இறைவனைத் தேடுகின்ற உயிர்களுக்கு இவர்கள் உதவி புரிகிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவியாக இருக்கின்ற இறைவியே, இப்போது இறை நிலையை அடைந்துவிட்ட சாதகரின் மனதிற்கு உள்ளேயிருந்து, அவரது உள்ளத்தையே தனக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு, அவருக்குள் வீற்றிருந்து சாதகரை ஆளுவதின் மூலம் அனைத்தையும் இயக்குகிறாள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1415 இல் உள்ளபடி, உலகச் செயல்களைப் புரிந்துகொண்டு பலவிதமான இடங்களில் இறைவியோடு சேர்ந்தே இருக்கின்ற முப்பத்திரண்டு சக்திகளும், ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனின் பேரொளி வடிவத்தையே தரிசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

  • வரி 2

    அந்தந்த இடங்களிலிருந்து உலக நன்மைக்கான காரணத்திற்காக இறைவிக்கு உள்ளேயிருந்து அவற்றைச் செயல்பட வைக்கிறார்கள்.

  • வரி 3

    ஆதிகாலத்திலேயே அனைத்து உயிர்களும் இறைவனை அறிந்துகொண்டு அவனைத் தேடி அடையவேண்டும் என்ற காரணத்தால் அருளப்பட்ட வேதங்களை, அண்டசராசரங்கள் முழுவதும் பரவும்படி எடுத்துச்சென்று, இறைவனைத் தேடுகின்ற உயிர்களுக்கு இவர்கள் உதவி புரிகிறார்கள்.

  • வரி 4

    இவர்களுக்கெல்லாம் தலைவியாக இருக்கின்ற இறைவியே, இப்போது இறை நிலையை அடைந்துவிட்ட சாதகரின் மனதிற்கு உள்ளேயிருந்து, அவரது உள்ளத்தையே தனக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு, அவருக்குள் வீற்றிருந்து சாதகரை ஆளுவதின் மூலம் அனைத்தையும் இயக்குகிறாள்.

திருமந்திரம் பாடல் #1416

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout