திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1417

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இல்லடைந் தாளுக்கு மில்லாத தொன்றில்லையில்லடைந் தானுக் கிறப்பது தானில்லையில்லடைந் தானுக் கிமையவர் தானொவ்வர்ரில்லடைந் தானுக்கு மில்லாதில் லானையே.

உரை

பாடல் #1416 இல் உள்ளபடி, சாதகரின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கும் இறைவிக்கு இல்லாதது என்று எதுவுமே இல்லை என்று பாடல் கூறுகிறது. இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகருக்கு இனி இறப்பது என்கிற நிகழ்வு இல்லை. இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகர், கண்ணின் இமை போல் உலகத்தைக் காத்துக்கொண்டிருக்கின்ற விண்ணவர்கள் அனைவருக்கும் சரிசமம் ஆவார். இறைவனே வீற்றிருப்பதால் இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவும், இறைவனைப் போலவே இல்லாத இடம் என்று எதுவும் இல்லாதவராக இருக்கிறார் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1416 இல் உள்ளபடி, சாதகரின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கும் இறைவிக்கு இல்லாதது என்று எதுவுமே இல்லை.

  • வரி 2

    இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகருக்கு இனி இறப்பது என்கிற நிகழ்வு இல்லை.

  • வரி 3

    இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகர், கண்ணின் இமை போல் உலகத்தைக் காத்துக்கொண்டிருக்கின்ற விண்ணவர்கள் அனைவருக்கும் சரிசமம் ஆவார்.

  • வரி 4

    இறைவனே வீற்றிருப்பதால் இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவும், இறைவனைப் போலவே இல்லாத இடம் என்று எதுவும் இல்லாதவராக இருக்கிறார்.

திருமந்திரம் பாடல் #1417

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout