தொடர்ந்து படிக்கread this section continuously
ஆனை மயக்கு மறுபத்து நாற்றறியானை யிருக்கு மறுபத்து நாலொளியானை யிருக்கு மறுபத்து நாலறையானை யங்கோடு மறுபத்து நாலிலே.
உரைmeaning
பாடல் #1417 இல் உள்ளபடி, இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவின் இறை தன்மையில் கவரப்பட்டு வணங்குகின்ற ஆன்மாக்களுக்கு அருள்கின்ற, பாடல் #1371 இல் உள்ளபடி, அறுபத்து நான்கு சக்திகள் இருக்கிறார்கள் என்று பாடல் கூறுகிறது. இவர்கள் அந்த ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் அறுபத்து நான்கு ஒளிகளாக இருக்கிறார்கள். இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தைச் சுற்றிக் காவலாக வீற்றிருக்கின்ற இந்த அறுபத்து நான்கு சக்திகளும், சாதகரை நாடிவருகின்ற ஆன்மாக்களைக் காத்தருளுகிறார்கள் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1417 says, there are sixty-four powers, as in verse 1371, who graciously aid the souls who are drawn to and worship the divine nature of the practitioner's soul that has itself become the Lord, the verse declares. These powers are themselves sixty-four lights that guide those souls. These same sixty-four powers, who stand as guards around the Nine-Letter Chakra within the soul of the practitioner who has become the Lord, graciously protect the souls who come seeking him, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1417 இல் உள்ளபடி, இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவின் இறை தன்மையில் கவரப்பட்டு வணங்குகின்ற ஆன்மாக்களுக்கு அருள்கின்ற, பாடல் #1371 இல் உள்ளபடி, அறுபத்து நான்கு சக்திகள் இருக்கிறார்கள்.
As verse 1417 says, there are sixty-four powers, as in verse 1371, who graciously aid the souls who are drawn to and worship the divine nature of the practitioner's soul that has itself become the Lord.
- வரி 2Line 2
இவர்கள் அந்த ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் அறுபத்து நான்கு ஒளிகளாக இருக்கிறார்கள்.
These powers are themselves sixty-four lights that guide those souls.
- வரி 3Line 3
இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தைச் சுற்றிக் காவலாக வீற்றிருக்கின்றார்கள்.
They stand as guards around the Nine-Letter Chakra within the soul of the practitioner who has become the Lord.
- வரி 4Line 4
சாதகரை நாடிவருகின்ற ஆன்மாக்களைக் காத்தருளுகிறார்கள்.
They graciously protect the souls who come seeking him.
திருமந்திரம் பாடல் #1418





