திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1419

ஐந்தாம் தந்திரம்1. சுத்த சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஊரு முலகமு மொக்கப் பணைக்கின்றபேரறி வாளன் பெருமை குறித்திடில்மேருவு மூவுல காளியிலங் கெழுந்தாரணி நால்வகைச் சைவமு மாமே.

உரை

அனைத்து உயிர்களையும் அவை வாழும் உலகத்தையும் ஒன்றாகக் கலந்து நின்று இயக்குகின்ற பேரறிவே இறைவன். அப்படிப்பட்ட ஞானமாக விளங்கும் அவனுடைய பெருமையைக் குறிப்பிட்டுச் சொல்லப் போனால், அனைத்துச் சக்திகளும் ஒன்றுசேர்ந்த உருவமாகிய மேரு மலையையும், மேலுலகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் ஆளுகின்ற அவனிடமிருந்தே தெளிவாகத் தோன்றி, அவனை அறிய முயலும் அடியவர்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற நான்கு வகையான நெறிமுறைகளே சைவம் என்னும் பெருமைக்கு உரியனவாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து உயிர்களையும் அவை வாழும் உலகத்தையும் ஒன்றாகக் கலந்து நின்று இயக்குகின்ற பேரறிவே இறைவன்;

  • வரி 2

    அப்படிப்பட்ட ஞானமாக விளங்கும் அவனுடைய பெருமையைக் குறிப்பிட்டுச் சொல்லப் போனால்,

  • வரி 3

    அனைத்துச் சக்திகளும் ஒன்றுசேர்ந்த உருவமாகிய மேரு மலையையும், மேலுலகம் பூலோகம் பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் ஆளுகின்ற அவனிடமிருந்தே தெளிவாகத் தோன்றி,

  • வரி 4

    அவனை அறிய முயலும் அடியவர்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற நான்கு வகையான நெறிமுறைகளே சைவம் என்னும் பெருமைக்கு உரியனவாகும்.

திருமந்திரம் பாடல் #1419

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout