திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1420

ஐந்தாம் தந்திரம்1. சுத்த சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்து மசத்துஞ் சதசத்துந் தான்கண்டுஞ்சித்து மசித்தையுஞ் சேர்வுறாமே நீத்துஞ்சுத்த மசுத்தமுந் தோய்வுறாமே நின்றுநித்தம் பரசுத்த சைவர்க்கு நேயமே.

உரை

நிலையானதாகிய சிவமும், நிலையில்லாததாகிய உடலும், அந்த நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் ஆகிய இம்மூன்றையும் கண்டு உணர்ந்தும், உலக அறிவும் அறியாமையும் ஒன்றாகச் சேர்ந்து விடாமல் அவற்றிலிருந்து விலகி இருந்தும், சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரண்டிலும் மயங்கி விடாமல் உண்மை ஞானத்திலேயே நின்றும், எப்போதும் பரம்பொருளாகிய இறைவனின் அதி சுத்த நிலையில் இருப்பதே சைவர்களின் பேரன்பு ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    நிலையானதாகிய சிவமும், நிலையில்லாததாகிய உடலும், அந்த நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் ஆகிய இம்மூன்றையும் கண்டு உணர்ந்தும்,

  • வரி 2

    உலக அறிவும் அறியாமையும் ஒன்றாகச் சேர்ந்து விடாமல் அவற்றிலிருந்து விலகி இருந்தும்,

  • வரி 3

    சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரண்டிலும் மயங்கி விடாமல் உண்மை ஞானத்திலேயே நின்றும்,

  • வரி 4

    எப்போதும் பரம்பொருளாகிய இறைவனின் அதி சுத்த நிலையில் இருப்பதே சைவர்களின் பேரன்பு ஆகும்.

திருமந்திரம் பாடல் #1420

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout