தொடர்ந்து படிக்கread this section continuously
கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகமுற்பத ஞான முறைமுறை நண்ணியேசொற்பத மேவித் துரிசற்று மேலானதற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.
உரைmeaning
இறைவனை அடைவதற்குக் கற்க வேண்டிய கல்விகள் அனைத்தையும் கற்றுக்கொண்டு, அதன் மூலம் பெற்ற கலை அறிவின் மிகவும் உன்னதமான உச்ச நிலையில் உண்மையான யோகத்தை அறிந்துகொண்டு, அந்த அறிவிற்கு முதல் மூலமாக இருக்கின்ற ஞானத்தை அடைய வேண்டிய முறைகளை அறிந்துகொண்டு, அவற்றை முறைப்படி கடைப்பிடித்து அதன் மூலம் அந்த ஞானத்தைப் பெற்றுக்கொண்டு, தாம் சொல்லுகின்ற வாக்கில் சத்தியத்தின் தன்மையைக் கடைப்பிடித்து, தம்மிடம் இருக்கும் அழுக்குகளான மும்மலங்களும் நீங்கப்பெற்று, அனைத்திற்கும் மேலாகத் தானாகவே இருக்கின்ற பரம்பொருளைத் தரிசித்து, அதைத் தமக்குள்ளேயே உணர்ந்திருப்பவர்களே சைவ சித்தாந்தர்கள் ஆவார்கள்.
Learning all the learning that must be learned to reach God, and, at the highest peak of the art-knowledge gained thereby, coming to know true yoga, coming to know the methods for reaching the wisdom that is the first, root ground of that knowledge, following those methods in due order and thereby gaining that wisdom, holding to truthfulness in the words they speak, becoming free of the three inborn stains that are the impurities within them, beholding the self-existent Supreme that stands above all else, and realizing it within themselves: those alone are the Saiva Siddhantins.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடைவதற்குக் கற்க வேண்டிய கல்விகள் அனைத்தையும் கற்றுக்கொண்டு, அதன் மூலம் பெற்ற கலை அறிவின் மிகவும் உன்னதமான உச்ச நிலையில் உண்மையான யோகத்தை அறிந்துகொண்டு,
Learning all the learning that must be learned to reach God, and, at the highest peak of the art-knowledge gained thereby, coming to know true yoga,
- வரி 2Line 2
அந்த அறிவிற்கு முதல் மூலமாக இருக்கின்ற ஞானத்தை அடைய வேண்டிய முறைகளை அறிந்துகொண்டு, அவற்றை முறைப்படி கடைப்பிடித்து அதன் மூலம் அந்த ஞானத்தைப் பெற்றுக்கொண்டு,
coming to know the methods for reaching the wisdom that is the first, root ground of that knowledge, following those methods in due order and thereby gaining that wisdom,
- வரி 3Line 3
தாம் சொல்லுகின்ற வாக்கில் சத்தியத்தின் தன்மையைக் கடைப்பிடித்து, தம்மிடம் இருக்கும் அழுக்குகளான மும்மலங்களும் நீங்கப்பெற்று, அனைத்திற்கும் மேலாக,
holding to truthfulness in the words they speak, becoming free of the three inborn stains that are the impurities within them, above all else,
- வரி 4Line 4
தானாகவே இருக்கின்ற பரம்பொருளைத் தரிசித்து, அதைத் தமக்குள்ளேயே உணர்ந்திருப்பவர்களே சைவ சித்தாந்தர்கள் ஆவார்கள்.
beholding the self-existent Supreme, and realizing it within themselves: those alone are the Saiva Siddhantins.
திருமந்திரம் பாடல் #1421





