திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1357

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உற்றிட மெல்லா முலப்பிலி பாழாகக்கற்றிட மெல்லாங் கடுவெளி யானதுமற்றிட மில்லை வழியில்லைத் தானில்லைச்சற்றிட மில்லைச் சலிப்பற நின்றிடே.

உரை

பாடல் #1356 இல் உள்ளபடி, சாதகரின் எண்ணங்கள் வழியாகத் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய எல்லா இடத்திலும், நவாக்கிரி சக்கரத்திலிருந்து வருகின்ற அழிவில்லாத இறைசக்தியால் கொடுமையான வினைகள் அனைத்தும் கெட்டு அழிந்துபோகும் என்று பாடல் கூறுகிறது. சாதகர் இதுவரை கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களையும் ஞாபகமாக வைத்திருந்த எண்ணங்களின் சேமிப்பு அனைத்தும் அழிந்துபோய், அந்த இடம் வெற்று இடமாக ஆகிவிடும். அனைத்து இடத்திலும் இருக்கின்ற சாதகருக்கு, ஒன்றோடொன்று வேறுபடுத்திப் பார்க்கின்ற இடம் என்று எதுவும் இல்லாமல் போய்விடும். அதனால், இடத்தின் வழியாகச் செல்ல வேண்டிய வழிகள் என்று எதுவும் இல்லாமலும், தான் என்கிற உடலோ மனமோ எண்ணமோ எதுவும் இல்லாமலும் அவர் இருப்பார். அதன்பிறகு, அவரைச் சுற்றியிருக்கின்ற உலகம் என்ற இடங்கள் எதுவும் இல்லாமல் போய்விடும். ஆகவே, இதனால் எந்தவிதமான மனச்சோர்வோ சலிப்போ அடையாமல், சாதகர்கள் தாம் செய்கின்ற சாதனையைத் தொடர்ந்து சமாதி நிலையில் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    சாதகரின் எண்ணங்கள் வழியாகத் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய எல்லா இடத்திலும், நவாக்கிரி சக்கரத்திலிருந்து வருகின்ற அழிவில்லாத இறைசக்தியால் கொடுமையான வினைகள் அனைத்தும் கெட்டு அழிந்துபோகும்.

  • வரி 2

    சாதகர் இதுவரை கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களையும் ஞாபகமாக வைத்திருந்த எண்ணங்களின் சேமிப்பு அனைத்தும் அழிந்துபோய், அந்த இடம் வெற்று இடமாக ஆகிவிடும்.

  • வரி 3

    அனைத்து இடத்திலும் இருக்கின்ற சாதகருக்கு, ஒன்றோடொன்று வேறுபடுத்திப் பார்க்கின்ற இடம் என்று எதுவும் இல்லாமல் போய்விடும்; அதனால் வழிகள் என்று எதுவும் இல்லாமலும், தான் என்கிற உடலோ மனமோ எண்ணமோ எதுவும் இல்லாமலும் அவர் இருப்பார்.

  • வரி 4

    அதன்பிறகு, அவரைச் சுற்றியிருக்கின்ற உலகம் என்ற இடங்கள் எதுவும் இல்லாமல் போய்விடும். ஆகவே, எந்தவிதமான மனச்சோர்வோ சலிப்போ அடையாமல், சாதகர்கள் தாம் செய்கின்ற சாதனையைத் தொடர்ந்து சமாதி நிலையில் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

திருமந்திரம் பாடல் #1357

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout