திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1358

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றிடு மேழ்கட லேழ்புவி யெல்லாநின்றிடு முள்ளம் நினைத்தவை தானொக்கநின்றிடுஞ் சித்தி நிலைபெற கண்டிடில்நின்றிடு மேலை விளக்கொளி தானே.

உரை

பாடல் #1357 இல் உள்ளபடி, சாதகர் சமாதியில் இருந்து இடைவிடாது செய்கின்ற சாதனையால், ஏழு வகைப் பெருங்கடல்களிலும் ஏழு வகை உலகங்களிலும் அவரால் இருக்க முடியும் என்று பாடல் கூறுகிறது. அது மட்டுமின்றி, அவரது உள்ளத்தில் நினைத்த அனைத்து விஷயங்களும் அந்தக் கணத்திலேயே அவரது எண்ணத்திற்கு ஏற்றவாறே நடக்கும். அப்போது, சாதகர் பெற்ற அருள்நிலை எப்போதும் மாறாமல் நிலையாக இருப்பதை அவர் கண்டு உணர்வார். அதன்பிறகு, உச்சத்திலிருந்து அனைத்தையும் விளங்கவைக்கின்ற பேரொளியாகவும் சாதகரே இருக்கிறார் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    சாதகர் சமாதியில் இருந்து இடைவிடாது செய்கின்ற சாதனையால், ஏழு வகைப் பெருங்கடல்களிலும் ஏழு வகை உலகங்களிலும் அவரால் இருக்க முடியும்.

  • வரி 2

    அவரது உள்ளத்தில் நினைத்த அனைத்து விஷயங்களும் அந்தக் கணத்திலேயே அவரது எண்ணத்திற்கு ஏற்றவாறே நடக்கும்.

  • வரி 3

    அப்போது, சாதகர் பெற்ற அருள்நிலை எப்போதும் மாறாமல் நிலையாக இருப்பதை அவர் கண்டு உணர்வார்.

  • வரி 4

    அதன்பிறகு, உச்சத்திலிருந்து அனைத்தையும் விளங்கவைக்கின்ற பேரொளியாகவும் சாதகரே இருக்கிறார்.

திருமந்திரம் பாடல் #1358

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout