தொடர்ந்து படிக்கread this section continuously
விளக்கொளி சௌமுதல் வௌவது வீறாம்விளக்கொளி சக்கர மெய்ப்பொரு ளாகும்விளக்கொளி யாகிய மின்கொடி யாளைவிளக்கொளி யாக விளங்கிடு நீரே.
உரைmeaning
பாடல் #1358 இல் உள்ளபடி, இடைவிடாது சாதனை செய்து அனைத்தையும் விளங்கவைக்கின்ற பேரொளியானது முறைப்படி அமைந்திருக்கிறது என்று பாடல் கூறுகிறது. அந்தப் பேரொளியே நவாக்கிரி சக்கரமாகவும், அதற்குள் இருக்கின்ற உண்மைப் பொருளாகவும் இருக்கிறது. இவ்வாறு பேரொளியாக இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில், மின்னல் போன்ற மாபெரும் சக்தியாக இருக்கின்ற இறைவியே அந்தப் பேரொளியாகவும் இருக்கிறாள் என்பதைச் சாதகர்கள் தெரிந்துகொள்வார்கள் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1358 says, the great light, which through unceasing sadhana makes all things manifest, is itself arranged in due order, the verse declares. That same great light is itself the Nine-Letter Chakra and the true substance held within it. And within this Nine-Letter Chakra that is the great light, practitioners will come to know that the Goddess, the mighty power like lightning, is herself that very light, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இடைவிடாது சாதனை செய்து அனைத்தையும் விளங்கவைக்கின்ற பேரொளியானது முறைப்படி அமைந்திருக்கிறது.
The great light, which through unceasing sadhana makes all things manifest, is itself arranged in due order.
- வரி 2Line 2
அந்தப் பேரொளியே நவாக்கிரி சக்கரமாகவும், அதற்குள் இருக்கின்ற உண்மைப் பொருளாகவும் இருக்கிறது.
That same great light is itself the Nine-Letter Chakra and the true substance held within it.
- வரி 3Line 3
இவ்வாறு பேரொளியாக இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில், மின்னல் போன்ற மாபெரும் சக்தியாக இருக்கின்ற இறைவியே அந்தப் பேரொளியாகவும் இருக்கிறாள்.
And within this Nine-Letter Chakra that is the great light, the Goddess, the mighty power like lightning, is herself that very light.
- வரி 4Line 4
இதைச் சாதகர்கள் தெரிந்துகொள்வார்கள்.
This the practitioners will come to know.
திருமந்திரம் பாடல் #1359





