திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1360

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லில்விளங்கிடு மெல்லிய லாளது வாகும்விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளைவிளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

உரை

பாடல் #1359 இல் சொன்னபடி, நவாக்கிரி சக்கரத்தில் உள்ள பேரொளியாக இறைவியே இருக்கின்றாள் என்பதைச் சாதகர்கள் தமக்குள் தெரிந்துகொள்கின்ற உச்ச நிலையில் வருகின்ற பேருண்மையான பரம்பொருளைச் சொல்ல முயன்றால், அதுவே மென்மையான இயல்பு கொண்ட இறைவியாகவும் இருக்கின்றது. சாதகரின் உடலுக்குள் நிலைபெற்று நிற்கின்ற உண்மையான ஞானத்தின் பரம்பொருளைத் தமக்குள் உணர்ந்து தெரிந்துகொண்டிருப்பவர்களே தெளிவு பெற்றவர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    உச்ச நிலையில் வருகின்ற பேருண்மையான பரம்பொருளைச் சொல்ல முயன்றால்,

  • வரி 2

    அதுவே மென்மையான இயல்பு கொண்ட இறைவியாகவும் இருக்கின்றது.

  • வரி 3

    சாதகரின் உடலுக்குள் நிலைபெற்று நிற்கின்ற உண்மையான ஞானத்தின் பரம்பொருளை

  • வரி 4

    தமக்குள் உணர்ந்து தெரிந்துகொண்டிருப்பவர்களே தெளிவு பெற்றவர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1360

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout