தொடர்ந்து படிக்கread this section continuously
தானே வெளியவ ளெங்கு நிறைந்தவள்தானே வெளிக்கும் வெளியது வானவள்தானே சகலமு மாக்கி யழித்தவள்தானே யனைத்துள வண்ட சகலமே.
உரைmeaning
பாடல் #1360 இல் சொன்னபடி சாதகர்கள் தமக்குள் உணர்ந்து தெரிந்துகொள்கின்ற இறைவி தாமே ஆகாயமாகவும், அதிலுள்ள அனைத்திலும் நிறைந்தும் இருக்கின்றவள். அவளே ஆகாயத்திற்கும் மேலான பரவெளியாகவும் இருக்கின்றவள். அவளே அனைத்தையும் உருவாக்கி, அவற்றின் வினை முடிந்தபின் அழிக்கின்றவள். அவளே அனைத்திலும் கலந்திருக்கின்றவளாகவும், அண்டசராசரத்தில் உள்ள அனைத்துமாகவும் இருக்கின்றாள்.
As verse 1360 says, the Goddess whom practitioners realize and know within themselves is herself the sky, and is also the one who fills everything within it. She herself is the vast space beyond even the sky. She herself creates all things and, once their karma is spent, destroys them. She herself remains merged in everything, and is also everything that exists in the whole created universe.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாதகர்கள் தமக்குள் உணர்ந்து தெரிந்துகொள்கின்ற இறைவி தாமே ஆகாயமாகவும், அதிலுள்ள அனைத்திலும் நிறைந்தும் இருக்கின்றவள்.
The Goddess whom practitioners realize and know within themselves is herself the sky, and also fills everything within it.
- வரி 2Line 2
அவளே ஆகாயத்திற்கும் மேலான பரவெளியாகவும் இருக்கின்றவள்.
She herself is the vast space beyond even the sky.
- வரி 3Line 3
அவளே அனைத்தையும் உருவாக்கி, அவற்றின் வினை முடிந்தபின் அழிக்கின்றவள்.
She herself creates all things and, once their karma is spent, destroys them.
- வரி 4Line 4
அவளே அனைத்திலும் கலந்திருக்கின்றவளாகவும், அண்டசராசரத்தில் உள்ள அனைத்துமாகவும் இருக்கின்றாள்.
She herself remains merged in everything, and is also everything that exists in the whole created universe.
திருமந்திரம் பாடல் #1361





