திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1362

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அண்டத்தி னுள்ளே யளப்பரி தானவள்பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங்கண்டத்தி னின்ற கலப்பறி யார்களே.

உரை

பாடல் #1360 இல் சொன்னபடி அண்டசராசரத்தில் உள்ள அனைத்துமாகவும் இருக்கின்ற இறைவியே, அந்த அண்டசராசரத்தின் உள்ளே அளவிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அரியவளாக இருக்கின்றாள். உடலுக்கு உள்ளே இருக்கின்ற மிகப் பெரும் ஆகாயமாகிய மனத்தையும் இறைவியே கண்டு கொண்டு இருக்கின்றாள். நவகுண்டமாகிய உடலுக்குள் இருந்து அதை இயக்குகின்ற பல விதமான இயக்கங்களைப் பார்த்து உணர்ந்துகொண்டாலும், அந்த உடலுக்குள் வீற்றிருக்கின்ற இறைவி உடலோடு கலந்திருக்கின்ற தன்மையை யாரும் அறிந்துகொள்வதில்லை.

வரி வாரியாக

  • வரி 1

    அண்டசராசரத்தில் உள்ள அனைத்துமாகவும் இருக்கின்ற இறைவியே, அந்த அண்டசராசரத்தின் உள்ளே அளவிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அரியவளாக இருக்கின்றாள்.

  • வரி 2

    உடலுக்கு உள்ளே இருக்கின்ற மிகப் பெரும் ஆகாயமாகிய மனத்தையும் இறைவியே கண்டு கொண்டு இருக்கின்றாள்.

  • வரி 3

    நவகுண்டமாகிய உடலுக்குள் இருந்து அதை இயக்குகின்ற பல விதமான இயக்கங்களைப் பார்த்து உணர்ந்துகொண்டாலும்,

  • வரி 4

    அந்த உடலுக்குள் வீற்றிருக்கின்ற இறைவி உடலோடு கலந்திருக்கின்ற தன்மையை யாரும் அறிந்துகொள்வதில்லை.

திருமந்திரம் பாடல் #1362

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout