திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1363

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கலப்பறி யார்கடல் சூழுல கெல்லாமுலப்பறி யாருட லோடுயிர் தன்னைசிலப்பறி யார்பல தேவரை நாடித்தலைப்பறி யாகச் சமைந்தவர் தாமே.

உரை

பாடல் #1362 இல் சொன்னபடி இறைவி உடலோடு கலந்திருக்கின்ற தன்மையை அறியாதவர்கள், பெருங்கடல்களால் சூழப்பட்ட உலகங்கள் எல்லாவற்றிலும் சென்று இறைவியைத் தேடி அலைகிறார்கள். தமது உடலுக்கு இறப்பு என்ற ஒன்று இருப்பதை அறியாதவர்கள், உடலோடு உயிர் ஒன்றாகக் கலந்திருப்பது போலவே இறைவியும் கலந்திருக்கிறாள் என்கிற சிறப்பான உண்மையை அறியாதவர்களாக, பல வித தேவர்களைத் தேடிச் சென்று வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். இவர்கள் தேடி அலையும் அனைத்துத் தேவர்களுக்கும் தலைவியாக இறைவியே இருக்கின்றாள் என்பதை அறியாதவர்களாகவே பலவித குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவி உடலோடு கலந்திருக்கின்ற தன்மையை அறியாதவர்கள், பெருங்கடல்களால் சூழப்பட்ட உலகங்கள் எல்லாவற்றிலும் சென்று இறைவியைத் தேடி அலைகிறார்கள்.

  • வரி 2

    தமது உடலுக்கு இறப்பு என்ற ஒன்று இருப்பதை அறியாதவர்கள், உடலோடு உயிர் ஒன்றாகக் கலந்திருப்பது போலவே இறைவியும் கலந்திருக்கிறாள் என்கிற சிறப்பான உண்மையை அறியாதவர்களாக,

  • வரி 3

    பல வித தேவர்களைத் தேடிச் சென்று வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.

  • வரி 4

    இவர்கள் தேடி அலையும் அனைத்துத் தேவர்களுக்கும் தலைவியாக இறைவியே இருக்கின்றாள் என்பதை அறியாதவர்களாகவே பலவித குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

திருமந்திரம் பாடல் #1363

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout