தொடர்ந்து படிக்கread this section continuously
தானே யெழுந்தவச் சக்கரஞ் சொல்லிடில்மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்றேனே யிரேகை திகைப்பற வென்பதிற்றானே கலந்தறை யெண்பத் தோடொன்றே.
உரைmeaning
சாதகர்கள் நவாக்கிரி சக்கரத்தில் சாதகம் செய்யும்போது, தமக்குள்ளிருந்து தானாகவே எழுந்து மேலே வருகின்ற அந்தச் சக்கரத்தைப் பற்றிச் சொல்லப்போனால், தமது மனத்தையும் புத்தியையும் ஒன்றாகச் சேர்த்து, முறைப்படி மானசீகக் கோடுகளால் அச்சக்கரத்தை அமைக்க வேண்டும். அதன்பிறகு, அந்தக் கோடுகளிலிருந்து கிடைக்கின்ற அமிழ்தைப் பார்த்துத் திகைத்துப்போய் நிற்காமல், சக்கரத்தில் உள்ள அறைகள் அனைத்திலும் தம்மையே ஒன்றாகக் கலந்து, மனத்தை அவற்றுடன் ஒன்றி நிறுத்த வேண்டும்.
When practitioners perform sadhana on the Navakshari Chakra and speak of this chakra that rises up by itself from within them, they must, by uniting mind and intellect together, form that chakra with mental lines drawn in the proper method. After that, rather than being bewildered by the nectar that comes from those lines, they must merge themselves as one with every chamber of the chakra, and hold the mind fixed as one with them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாதகர்கள் நவாக்கிரி சக்கரத்தில் சாதகம் செய்யும்போது, தமக்குள்ளிருந்து தானாகவே எழுந்து மேலே வருகின்ற அந்தச் சக்கரத்தைப் பற்றிச் சொல்லப்போனால்,
When practitioners perform sadhana on the Navakshari Chakra and speak of this chakra that rises up by itself from within them,
- வரி 2Line 2
தமது மனத்தையும் புத்தியையும் ஒன்றாகச் சேர்த்து, முறைப்படி மானசீகக் கோடுகளால் அச்சக்கரத்தை அமைக்க வேண்டும்.
they must, by uniting mind and intellect together, form that chakra with mental lines drawn in the proper method.
- வரி 3Line 3
அதன்பிறகு, அந்தக் கோடுகளிலிருந்து கிடைக்கின்ற அமிழ்தைப் பார்த்துத் திகைத்துப்போய் நிற்காமல்,
After that, rather than being bewildered by the nectar that comes from those lines,
- வரி 4Line 4
சக்கரத்தில் உள்ள அறைகள் அனைத்திலும் தம்மையே ஒன்றாகக் கலந்து, மனத்தை அவற்றுடன் ஒன்றி நிறுத்த வேண்டும்.
they must merge themselves as one with every chamber of the chakra, and hold the mind fixed as one with them.
திருமந்திரம் பாடல் #1364





