தொடர்ந்து படிக்கread this section continuously
ஒன்றிய சக்கர மோதிடும் வேளையில்வெள்ளி கொள்மேனி மதிவட்டம் பொன்மையாங்கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்மன்றிய லம்மை யெழுத்தவை பச்சையே.
உரைmeaning
பாடல் #1364 இல் சொன்னபடி சாதகர் மனம் ஒன்றியிருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை ஜெபம் செய்யும்போது, வெள்ளி போன்ற வெண்மை நிற ஒளியைக் கொண்டிருக்கும் சாதகரின் உடல், அவரது மனமும் அறிவும் முழுமை பெற்றபின் தங்க நிற ஒளியாக மாறிப் பிரகாசிக்கும். அப்போது சக்கரத்தில் சக்தியேற்றம் பெற்று முழுமையடைந்திருக்கும் கோடுகள் சாதகரின் உடலோடு ஒன்றாகக் கலந்து செழுமை பெறும். அதன்பிறகு, அம்பலத்தில் இறைவனோடு சேர்ந்து ஆடுகின்ற இயல்பு கொண்ட இறைவியின் மந்திர எழுத்துக்களாக, சக்கரத்தில் இருக்கும் பீஜங்கள் அனைத்தும் தமது சக்தி குறையாமல் எப்போதும் பசுமையாக நிலைத்து நிற்கும்.
As verse 1364 says, when a practitioner whose mind has become one with the Navakshari Chakra recites it, the practitioner's body, which carries a white light like silver, will change into a golden light and shine once mind and understanding have reached fullness. At that time, the lines of the chakra, having gained power and reached fullness, will merge as one with the practitioner's body and grow rich. After that, as the mantra letters of the Goddess whose nature it is to dance together with the Lord in the sacred hall, all the seed syllables in the chakra will stand ever fresh and green, their power never diminishing.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாதகர் மனம் ஒன்றியிருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை ஜெபம் செய்யும்போது, வெள்ளி போன்ற வெண்மை நிற ஒளியைக் கொண்டிருக்கும் சாதகரின் உடல்,
When a practitioner whose mind has become one with the Navakshari Chakra recites it, the practitioner's body, which carries a white light like silver,
- வரி 2Line 2
அவரது மனமும் அறிவும் முழுமை பெற்றபின் தங்க நிற ஒளியாக மாறிப் பிரகாசிக்கும்.
will change into a golden light and shine once mind and understanding have reached fullness.
- வரி 3Line 3
அப்போது சக்கரத்தில் சக்தியேற்றம் பெற்று முழுமையடைந்திருக்கும் கோடுகள் சாதகரின் உடலோடு ஒன்றாகக் கலந்து செழுமை பெறும்.
At that time, the lines of the chakra, having gained power and reached fullness, will merge as one with the practitioner's body and grow rich.
- வரி 4Line 4
அதன்பிறகு, அம்பலத்தில் இறைவனோடு சேர்ந்து ஆடுகின்ற இயல்பு கொண்ட இறைவியின் மந்திர எழுத்துக்களாக, சக்கரத்தில் இருக்கும் பீஜங்கள் அனைத்தும் தமது சக்தி குறையாமல் எப்போதும் பசுமையாக நிலைத்து நிற்கும்.
After that, as the mantra letters of the Goddess whose nature it is to dance together with the Lord in the sacred hall, all the seed syllables in the chakra will stand ever fresh and green, their power never diminishing.
திருமந்திரம் பாடல் #1365





