தொடர்ந்து படிக்கread this section continuously
ஏய்ந்த மரவுரி தன்னி லெழுதிநீவாய்ந்த விப்பொன்னெண்பத் தொன்றி னிரைத்தபின்காய்ந்தவி நெய்யொட் கலந்துட னோமமுமாய்ந்த வியாயிர மாகுதி பண்ணே.
உரைmeaning
நவாக்கிரி சக்கரத்தை வரைவதற்கு ஏற்ற பொருளின் மேல் நீங்கள் அச்சக்கரத்தை எழுத வேண்டும். அதற்கு ஏற்றபடி தயார் செய்யப்பட்ட தகட்டின் மேல் அதை வைத்து, சக்கரத்தின் அறைகள் அனைத்திலும் அதற்குரிய பீஜங்களை எழுதி நிரப்பிய பின், முறைப்படி தயாரிக்கப்பட்ட நெய்யுடன் கலந்து மரக்கட்டைகளை வைத்து ஹோமம் செய்து, தகட்டில் எழுதிய பீஜங்களையே நன்கு தியானித்து, மீண்டும் மீண்டும் ஜெபித்து ஹோமத்தில் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
You must write the Navakshari Chakra upon a material fitting for it. Having placed that upon a plate duly prepared for it, and having filled every chamber of the chakra with its own seed syllables, mixing with ghee prepared in the proper manner and setting sacred wood in place, you must perform the fire offering, meditating well upon the seed syllables written on the plate and, chanting them again and again, offer them up in the fire.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நவாக்கிரி சக்கரத்தை வரைவதற்கு ஏற்ற பொருளின் மேல் நீங்கள் அச்சக்கரத்தை எழுத வேண்டும்.
You must write the Navakshari Chakra upon a material fitting for it.
- வரி 2Line 2
அதற்கு ஏற்றபடி தயார் செய்யப்பட்ட தகட்டின் மேல் அதை வைத்து, சக்கரத்தின் அறைகள் அனைத்திலும் அதற்குரிய பீஜங்களை எழுதி நிரப்பிய பின்,
Having placed that upon a plate duly prepared for it, and having filled every chamber of the chakra with its own seed syllables,
- வரி 3Line 3
முறைப்படி தயாரிக்கப்பட்ட நெய்யுடன் கலந்து, மரக்கட்டைகளை வைத்து ஹோமம் செய்து,
mixing with ghee prepared in the proper manner and setting sacred wood in place, you must perform the fire offering,
- வரி 4Line 4
தகட்டில் எழுதிய பீஜங்களையே நன்கு தியானித்து, மீண்டும் மீண்டும் ஜெபித்து ஹோமத்தில் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
and, meditating well upon the seed syllables written on the plate and chanting them again and again, you must offer them up in the fire.
திருமந்திரம் பாடல் #1366





