தொடர்ந்து படிக்கread this section continuously
பண்ணிய பொன்னைப் பகைப்பற நீபிடியெண்ணிய நாள்களி லின்பமே யெய்திடுநண்ணிய நாமமு நான்முக னொத்திடுஞ்சொல்லிய லேறிற் சொக்கனு மாகுமே.
உரைmeaning
பாடல் #1366 இல் சொன்ன முறைப்படி சாதகர் சாதகத்தால் சக்தியேற்றிய தகட்டை எவ்வித குற்றமும் தீய எண்ணமும் இல்லாமல் சாதகர் கைவரப் பெற்றால், அவர் தியானத்தில் இருக்கும் அனைத்து நாட்களிலும் பேரின்பமே கிடைத்துக்கொண்டிருக்கும். சாதகர் ஜெபித்துக்கொண்டிருக்கும் மந்திரங்களும் நான்முகன் என்னும் பிரம்மனின் படைத்தல் தொழிலுக்கு நிகரான சக்தி மந்திரத்திற்கு நிகராக வரப் பெறும். அதன்பிறகு அந்த மந்திரத்தின் சக்தியின் இயல்பை சாதகர் முழுமையாகப் பெற்றுவிட்டால், சாதகரும் சிவனைப் போலவே அன்பாளனாகவும் அருளாளனாகவும் ஆகிவிடுவார்.
As the previous verse says, if the practitioner comes to hold the plate empowered through the sadhana without any fault or evil thought in it, then supreme bliss will be gained on every day the practitioner remains in meditation. The mantras the practitioner recites will also come to equal in power the mantra of Brahma of the four faces, who is equal to the work of creation itself. After that, once the practitioner has fully gained the nature of that mantra's power, the practitioner too will become, like Shiva, one who is loving and one who grants grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1366 இல் சொன்ன முறைப்படி சாதகர் சாதகத்தால் சக்தியேற்றிய தகட்டை எவ்வித குற்றமும் தீய எண்ணமும் இல்லாமல் சாதகர் கைவரப் பெற்றால்,
As the previous verse says, if the practitioner comes to hold the plate empowered through the sadhana without any fault or evil thought in it,
- வரி 2Line 2
அவர் தியானத்தில் இருக்கும் அனைத்து நாட்களிலும் பேரின்பமே கிடைத்துக்கொண்டிருக்கும்.
then supreme bliss will be gained on every day the practitioner remains in meditation.
- வரி 3Line 3
சாதகர் ஜெபித்துக்கொண்டிருக்கும் மந்திரங்களும் நான்முகன் என்னும் பிரம்மனின் படைத்தல் தொழிலுக்கு நிகரான சக்தி மந்திரத்திற்கு நிகராக வரப் பெறும்.
The mantras the practitioner recites will also come to equal in power the mantra of Brahma of the four faces, who is equal to the work of creation itself.
- வரி 4Line 4
அதன்பிறகு அந்த மந்திரத்தின் சக்தியின் இயல்பை சாதகர் முழுமையாகப் பெற்றுவிட்டால், சாதகரும் சிவனைப் போலவே அன்பாளனாகவும் அருளாளனாகவும் ஆகிவிடுவார்.
After that, once the practitioner has fully gained the nature of that mantra's power, the practitioner too will become, like Shiva, one who is loving and one who grants grace.
திருமந்திரம் பாடல் #1367





