திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1356

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கேடில்லைக் காணுங் கிளரொளி கண்டபினாடில்லைக் காணும் நாமுத லற்றபின்மாடில்லைக் காணும் வரும்வழி கண்டபின்காடில்லைக் காணுங் கருத்துற் றிடத்துக்கே.

உரை

பாடல் #1355 இல் உள்ளபடி, சாதகர்கள் தமக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து உத்வேகமாக எழுந்துவரும் பேரொளியைத் தரிசித்தபின், தமது உடலுக்குத் தேவையான இடம் என்ற ஒன்றும் இவ்வுலகில் இல்லாமல் போவதை அவர்கள் காண்பார்கள் என்று பாடல் கூறுகிறது. அதன்பிறகு, காலத்தைக் குறிக்கின்ற அடையாளங்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும். சாதகர்களும் தமது உடலைச் சார்ந்திருக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லாமல் இருப்பதைக் காண்பார்கள். அதன்பிறகு, இறைவனை அடைய வேண்டுமென்று சாதகரை நாடிவரும் உயிர்களுக்கு, இறைவனை அடையும் வழிகள் எவை என்று தமக்குள் கண்டறிந்து, அவற்றைத் தகுதியானவர்களுக்குக் கொடுப்பார்கள். சாதகரின் எண்ணங்கள் வழியாகத் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய எல்லா இடத்திலும், இறைவனை அடைய நாடிவரும் உயிர்களைச் சுற்றிக் காடுபோலச் சூழ்ந்திருக்கும் கொடிய வினைகள் இல்லாமல் போவதையும் அவர்கள் காண்பார்கள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    சாதகர்கள் தமக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து உத்வேகமாக எழுந்துவரும் பேரொளியைத் தரிசித்தபின்,

  • வரி 2

    தமது உடலுக்குத் தேவையான இடம் என்ற ஒன்றும் இவ்வுலகில் இல்லாமல் போவதை அவர்கள் காண்பார்கள்; அதன்பிறகு, காலத்தைக் குறிக்கின்ற அடையாளங்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும்.

  • வரி 3

    சாதகர்களும் தமது உடலைச் சார்ந்திருக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லாமல் இருப்பதைக் காண்பார்கள்; இறைவனை அடைய வேண்டுமென்று சாதகரை நாடிவரும் உயிர்களுக்கு, இறைவனை அடையும் வழிகள் எவை என்று தமக்குள் கண்டறிந்து, அவற்றைத் தகுதியானவர்களுக்குக் கொடுப்பார்கள்.

  • வரி 4

    சாதகரின் எண்ணங்கள் வழியாகத் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய எல்லா இடத்திலும், இறைவனை அடைய நாடிவரும் உயிர்களைச் சுற்றிக் காடுபோலச் சூழ்ந்திருக்கும் கொடிய வினைகள் இல்லாமல் போவதையும் அவர்கள் காண்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1356

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout