திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1355

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தாளதி னுள்ளே சமைந்தமு தேச்சுரிகாலது கொண்டு கருத்துற வீசிடில்நாளது நாளும் புதுமைகள் கண்டபின்கேளது காயமுங் கேடில்லைக் காணுமே.

உரை

பாடல் #1354 இல் உள்ளபடி, நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகளே, சக்கரத்திற்குள் சக்தியூட்டமாக மாறியிருக்கின்ற பீஜ மந்திர எழுத்துக்களான அமிழ்தத்திற்குத் தலைவியாகவும் அந்த இறைவியே இருக்கிறாள் என்று பாடல் கூறுகிறது. அவளது அருளால் சக்தியூட்டம் பெற்ற அந்தப் பீஜ மந்திர எழுத்துகளை, அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் சாதகர் வெளியிடும்போது, தினந்தோறும் பலவிதமான புதுமையான நன்மைகள் தம்மைச் சுற்றி நடப்பதைச் சாதகர்கள் காண்பார்கள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகளே, சக்கரத்திற்குள் சக்தியூட்டமாக மாறியிருக்கின்ற பீஜ மந்திர எழுத்துக்களான அமிழ்தத்திற்குத் தலைவியாகவும் அந்த இறைவியே இருக்கிறாள்.

  • வரி 2

    அவளது அருளால் சக்தியூட்டம் பெற்ற அந்தப் பீஜ மந்திர எழுத்துகளை, அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் சாதகர் வெளியிடும்போது,

  • வரி 3

    தினந்தோறும் பலவிதமான புதுமையான நன்மைகள் தம்மைச் சுற்றி நடப்பதைச் சாதகர்கள் காண்பார்கள்.

  • வரி 4

    அதனால் பயனடைந்தவர்கள் சொல்லுகின்ற புகழ்ச்சிகளையும் அவர்கள் கேட்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1355

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout