திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1354

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மெய்ப்பொருள் வௌமுதல் ஹௌவது வீறாகக்கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரந்தற்பொரு ளாகச் சமைந்தமு தேவரிநற்பொரு ளாக நடுவிருந் தாளே.

உரை

பாடல் #1353 இல் உள்ளபடி, நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே ஆகிவிட்ட சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரம் முறைப்படி அமைந்திருக்கும் என்று பாடல் கூறுகிறது. சாதகருடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற இந்தச் சக்கரத்தின் பொருள், அவருடன் கலந்திருந்து அவருக்குள்ளிருந்து எழுந்துவரும். இவ்வாறு சாதகருக்குள்ளிருந்து எழுந்துவரும் இந்தச் சக்கரமானது, உலகில் தானாகவே நிற்கின்ற பொருளாக ஆகும். அதுவே நன்மைகள் கொடுப்பதற்காக மாறுகின்ற அமிழ்தத்தின் தன்மைக்குத் தலைவியாக இருக்கின்ற இறைவியே, நன்மைகள் அனைத்தும் தருகின்ற இந்தச் சக்கரத்தின் நடுவிலும் வீற்றிருக்கிறாள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே ஆகிவிட்ட சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரம் முறைப்படி அமைந்திருக்கும்.

  • வரி 2

    சாதகருடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற இந்தச் சக்கரத்தின் பொருள், அவருடன் கலந்திருந்து அவருக்குள்ளிருந்து எழுந்துவரும்.

  • வரி 3

    இவ்வாறு எழுந்துவரும் இந்தச் சக்கரமானது, உலகில் தானாகவே நிற்கின்ற பொருளாக ஆகும்; அமுதேஸ்வரி

  • வரி 4

    நன்மைகள் கொடுப்பதற்காக மாறுகின்ற அமிழ்தத்தின் தன்மைக்குத் தலைவியாக இருக்கின்ற இறைவி, நன்மைகள் அனைத்தும் தருகின்ற இந்தச் சக்கரத்தின் நடுவிலும் வீற்றிருக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1354

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout