தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றிட மேழு புவனமு மொன்றாகக்கண்டிடு முள்ளங் கலந்தெங்குந் தானாகக்கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.
உரைmeaning
பாடல் #1352 இல் உள்ளபடி, எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்துத் தியானித்திருக்கும் சாதகர்கள், தாம் சாதனை செய்கின்ற இடத்திலிருந்தே ஏழு வகை உலகங்களையும் ஒரே உலகம்போல் ஒன்றாகப் பார்க்கின்ற உள்ளத்தைப் பெறுகிறார்கள் என்று பாடல் கூறுகிறது. இவ்வாறு அனைத்து உலகங்களையும் ஒன்றாகவே பார்க்கின்ற சாதகர்கள், அனைத்தோடும் கலந்து தாமாகவே ஆகிவிடுவதோடு, உலகில் பலவாறாக இருக்கின்ற தன்மைகள் அனைத்தையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்வார்கள். இதனால் உயிர்களிடமிருந்து கொடுமையான வினைகளைப் பிரித்து, நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே சாதகரும் ஆகிவிடுவார் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1352 says, practitioners who keep the Goddess always in their thoughts and remain in meditation upon her gain a mind that sees the seven kinds of worlds as though one, right from the place where they perform their sadhana, the verse declares. Practitioners who thus see all the worlds as one merge with everything and become one with it, and take all the differing natures that exist in the world as one alone. Because of this, they separate the cruel karmas from living beings and themselves become the true substance that reveals the truth held within the Nine-Letter Chakra, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்துத் தியானித்திருக்கும் சாதகர்கள், தாம் சாதனை செய்கின்ற இடத்திலிருந்தே ஏழு வகை உலகங்களையும் ஒரே உலகம்போல் ஒன்றாகப் பார்க்கின்ற உள்ளத்தைப் பெறுகிறார்கள்.
Practitioners who keep the Goddess always in their thoughts and remain in meditation upon her gain a mind that sees the seven kinds of worlds as though one, right from the place where they perform their sadhana.
- வரி 2Line 2
இவ்வாறு அனைத்து உலகங்களையும் ஒன்றாகவே பார்க்கின்ற சாதகர்கள், அனைத்தோடும் கலந்து தாமாகவே ஆகிவிடுவார்கள்.
Practitioners who thus see all the worlds as one merge with everything and become one with it.
- வரி 3Line 3
உலகில் பலவாறாக இருக்கின்ற தன்மைகள் அனைத்தையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்வார்கள்.
And they take all the differing natures that exist in the world as one alone.
- வரி 4Line 4
இதனால் உயிர்களிடமிருந்து கொடுமையான வினைகளைப் பிரித்து, நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே சாதகரும் ஆகிவிடுவார்.
Because of this, they separate the cruel karmas from living beings and themselves become the true substance that reveals the truth held within the Nine-Letter Chakra.
திருமந்திரம் பாடல் #1353





