தொடர்ந்து படிக்கread this section continuously
காணலு மாகுங் கலந்துயிர் செய்வனகாணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்காணலு மாகுங் கலந்து வழிசெய்யக்காணலு மாகுங் கருத்துற நில்லே.
உரைmeaning
பாடல் #1351 இல் உள்ளபடி, நவாக்கிரி சக்கரத்தைச் சாதனை செய்யும் சாதகர்களால் இறைவி உயிர்களோடு ஒன்றாகக் கலந்துநின்று செய்கின்ற அனைத்துச் செயல்களையும் தரிசிக்க முடியும் என்று பாடல் கூறுகிறது. அது மட்டுமின்றி, உயிர்களின் எண்ணங்களுக்கு உள்ளே இறைவி இருக்கும் தன்மையையும் தரிசிக்க முடியும். அதேபோல, உயிர்களோடு ஒன்றாகக் கலந்துநின்று அவற்றுக்கு ஏற்ற நல்வழியில் இறைவி செல்ல வைப்பதையும் தரிசிக்க முடியும். இதனால், எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்துத் தியானித்திருக்க வேண்டும் என்று பாடல் அறிவுறுத்துகிறது.
As verse 1351 says, practitioners who perform the sadhana of the Nine-Letter Chakra are able to behold every action that the Goddess performs while remaining blended as one with living beings, the verse declares. Further, they are able to behold her presence within the very thoughts of living beings. Likewise, they are able to behold how, remaining blended as one with living beings, she leads them along the good path fitting for them. And thus, the verse counsels, one should always keep the Goddess in one's thoughts and remain in meditation upon her.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நவாக்கிரி சக்கரத்தைச் சாதனை செய்யும் சாதகர்களால் இறைவி உயிர்களோடு ஒன்றாகக் கலந்துநின்று செய்கின்ற அனைத்துச் செயல்களையும் தரிசிக்க முடியும்.
Practitioners who perform the sadhana of the Nine-Letter Chakra are able to behold every action that the Goddess performs while remaining blended as one with living beings.
- வரி 2Line 2
அது மட்டுமின்றி, உயிர்களின் எண்ணங்களுக்கு உள்ளே இறைவி இருக்கும் தன்மையையும் தரிசிக்க முடியும்.
Further, they are able to behold her presence within the very thoughts of living beings.
- வரி 3Line 3
அதேபோல, உயிர்களோடு ஒன்றாகக் கலந்துநின்று அவற்றுக்கு ஏற்ற நல்வழியில் இறைவி செல்ல வைப்பதையும் தரிசிக்க முடியும்.
Likewise, they are able to behold how, remaining blended as one with living beings, she leads them along the good path fitting for them.
- வரி 4Line 4
இதனால், எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்துத் தியானித்திருக்க வேண்டும் என்று பாடல் அறிவுறுத்துகிறது.
And thus, the verse counsels, one should always keep the Goddess in one's thoughts and remain in meditation upon her.
திருமந்திரம் பாடல் #1352





