திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1351

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்டென்னுளு மாகி யிடம்பெற நின்றவள்மன்னுளு நீரனல் காலுளும் வானுளுங்கண்ணுளு மெய்யுளுங் காணலு மாமே.

உரை

பாடல் #1350 இல் உள்ளபடி, அனைத்து உயிர்களையும் தனக்குள் தாங்கி அனைத்துமாகவே இருக்கின்ற இறைவி, அண்ட சராசரங்களில் இருக்கின்ற உலகங்கள் அனைத்தையும் தனக்குள் கொண்டும் இருக்கிறாள் என்று பாடல் கூறுகிறது. அவளே சாதகர்களுக்கு உள்ளேயும் அனைத்துமாகி அவர்களுக்குள் முழுவதும் நிறைந்து நிற்கிறாள். அவளே பஞ்சபூதங்களில் நிலத்தின் உள்ளேயும், நீரின் உள்ளேயும், நெருப்பின் உள்ளேயும், காற்றின் உள்ளேயும், ஆகாயத்தின் உள்ளேயும் இருக்கிறாள். அவளே சாதகர்களின் கண்ணின் உள்ளேயும், அவர்களின் உடலுக்கு உள்ளேயும் வீற்றிருக்கிறாள் என்பதை, நவாக்கிரி சக்கரத்தைச் சாதனை செய்யும் சாதகர்களால் தரிசிக்கவும் முடியும் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து உயிர்களையும் தனக்குள் தாங்கி அனைத்துமாகவே இருக்கின்ற இறைவி, அண்ட சராசரங்களில் இருக்கின்ற உலகங்கள் அனைத்தையும் தனக்குள் கொண்டும் இருக்கிறாள்.

  • வரி 2

    அவளே சாதகர்களுக்கு உள்ளேயும் அனைத்துமாகி அவர்களுக்குள் முழுவதும் நிறைந்து நிற்கிறாள்.

  • வரி 3

    அவளே பஞ்சபூதங்களில் நிலத்தின் உள்ளேயும், நீரின் உள்ளேயும், நெருப்பின் உள்ளேயும், காற்றின் உள்ளேயும், ஆகாயத்தின் உள்ளேயும் இருக்கிறாள்.

  • வரி 4

    அவளே சாதகர்களின் கண்ணின் உள்ளேயும், அவர்களின் உடலுக்கு உள்ளேயும் வீற்றிருக்கிறாள் என்பதை, நவாக்கிரி சக்கரத்தைச் சாதனை செய்யும் சாதகர்களால் தரிசிக்கவும் முடியும்.

திருமந்திரம் பாடல் #1351

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout