தொடர்ந்து படிக்கread this section continuously
நடந்திடும் பாரி னன்மைக ளெல்லாங்கடந்திடுங் காலனு மெண்ணிய நாளும்படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போலவடைந்திடு மவ்வண்ண மடைந்திடு நீயே.
உரைmeaning
பாடல் #1325 இல் உள்ளபடி, உலக நன்மைக்குத் தேவையானதை சாதகர்கள் எண்ணியபடியே, நவாக்கிரி சக்கரத்தின் சக்தியால் அனைத்து விதமான நன்மையான காரியங்களும் உலகில் நடக்கும். எமன் சாதகர்களுக்குக் குறித்த ஆயுள் முடியும் நாளும் அவர்களைக் கடந்துபோய்விடும் என்று இப்பாடல் கூறுகிறது. சாதகரின் பெயரும் புகழும், சூரியனிலிருந்து பாய்ந்துவரும் ஒளிக் கதிர்களைப் போலவே உலகம் முழுவதும் பரந்துசெல்லும். இப்படித் தாம் செய்யும் சாதகத்தின் மூலம் உலகத்திற்கு நன்மைகள் செய்து, சாதகர்கள் இறைவனை நோக்கிச் சென்று அடைவார்கள்.
As verse 1325 says, according to what practitioners have wished for the world's good, all manner of good deeds come to pass in the world through the power of the Navakkiri Chakra. This verse declares that the day Yama has appointed for the end of the practitioners' allotted life passes them by. The practitioner's name and fame spread across the entire world, like rays of light streaming from the sun. In this way, through the sadhana they perform, practitioners do good for the world and go on to reach God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1325 இல் உள்ளபடி, உலக நன்மைக்குத் தேவையானதை சாதகர்கள் எண்ணியபடியே, நவாக்கிரி சக்கரத்தின் சக்தியால் அனைத்து விதமான நன்மையான காரியங்களும் உலகில் நடக்கும்.
As verse 1325 says, according to what practitioners have wished for the world's good, all manner of good deeds come to pass in the world through the power of the Navakkiri Chakra.
- வரி 2Line 2
எமன் சாதகர்களுக்குக் குறித்த ஆயுள் முடியும் நாளும் அவர்களைக் கடந்துபோய்விடும் என்று இப்பாடல் கூறுகிறது.
This verse declares that the day Yama has appointed for the end of the practitioners' allotted life passes them by.
- வரி 3Line 3
சாதகரின் பெயரும் புகழும், சூரியனிலிருந்து பாய்ந்துவரும் ஒளிக் கதிர்களைப் போலவே உலகம் முழுவதும் பரந்துசெல்லும்.
The practitioner's name and fame spread across the entire world, like rays of light streaming from the sun.
- வரி 4Line 4
இப்படித் தாம் செய்யும் சாதகத்தின் மூலம் உலகத்திற்கு நன்மைகள் செய்து, சாதகர்கள் இறைவனை நோக்கிச் சென்று அடைவார்கள்.
In this way, through the sadhana they perform, practitioners do good for the world and go on to reach God.
திருமந்திரம் பாடல் #1326





