தொடர்ந்து படிக்கread this section continuously
அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுட னெல்லாமடைந்திடு மாதி யருளுந் திருவுமடைந்திடு மண்டத் தமரர்கள் வாழ்வுமடைந்திடு மவ்வண்ண மறிந்திடு நீயே.
உரைmeaning
பாடல் #1326 இல் உள்ளபடி, நவாக்கிரி சக்கரத்தைச் சாதகம் செய்யும் சாதகர்கள், பொன் போல் பிரகாசிக்கும் உடலையும், வெள்ளி போல் தூய்மையாக மலங்கள் நீங்கிய ஆன்மாவையும், வைரக் கல்லைப் போல எதனாலும் அசையாத உறுதியான மனத்தையும் அடைவார்கள். அது மட்டுமின்றி, ஆதிப் பரம்பொருளான இறைவனின் திருவருளையும் இறைவனது திருமேனியையும் அடைவார்கள். மேலும், அண்ட சராசரங்களில் வீற்றிருக்கும் அமரர்களின் தெய்வீக வாழ்க்கையையும் அடைவார்கள் என்று இப்பாடல் கூறுகிறது. இப்படி நவாக்கிரி சக்கரத்தைச் சாதகம் செய்வதன் மூலம், அனைத்தையும் அதனதன் முறைப்படியே அடையும் வழிகளைச் சாதகர்கள் அறிந்துகொள்வார்கள்.
As verse 1326 says, practitioners who take up the sadhana of the Navakkiri Chakra will attain a body shining like gold, a soul purified like silver, free of impurities, and a mind as unmoving and unshaken as a diamond. Beyond that, they will attain the sacred grace of the Lord, the primal supreme being, and the Lord's own sacred form. This verse further declares that they will attain the celestial life of the immortals who dwell throughout the universe. In this way, by taking up the sadhana of the Navakkiri Chakra, practitioners come to know the ways of attaining all of this, each in its proper manner.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1326 இல் உள்ளபடி, நவாக்கிரி சக்கரத்தைச் சாதகம் செய்யும் சாதகர்கள், பொன் போல் பிரகாசிக்கும் உடலையும், வெள்ளி போல் தூய்மையாக மலங்கள் நீங்கிய ஆன்மாவையும், வைரக் கல்லைப் போல எதனாலும் அசையாத உறுதியான மனத்தையும் அடைவார்கள்.
As verse 1326 says, practitioners who take up the sadhana of the Navakkiri Chakra will attain a body shining like gold, a soul purified like silver, free of impurities, and a mind as unmoving and unshaken as a diamond.
- வரி 2Line 2
அது மட்டுமின்றி, ஆதிப் பரம்பொருளான இறைவனின் திருவருளையும் இறைவனது திருமேனியையும் அடைவார்கள்.
Beyond that, they will attain the sacred grace of the Lord, the primal supreme being, and the Lord's own sacred form.
- வரி 3Line 3
மேலும், அண்ட சராசரங்களில் வீற்றிருக்கும் அமரர்களின் தெய்வீக வாழ்க்கையையும் அடைவார்கள் என்று இப்பாடல் கூறுகிறது.
This verse further declares that they will attain the celestial life of the immortals who dwell throughout the universe.
- வரி 4Line 4
இப்படி நவாக்கிரி சக்கரத்தைச் சாதகம் செய்வதன் மூலம், அனைத்தையும் அதனதன் முறைப்படியே அடையும் வழிகளைச் சாதகர்கள் அறிந்துகொள்வார்கள்.
In this way, by taking up the sadhana of the Navakkiri Chakra, practitioners come to know the ways of attaining all of this, each in its proper manner.
திருமந்திரம் பாடல் #1327





