தொடர்ந்து படிக்கread this section continuously
அறிந்திடு வார்க ளமரர்க ளாகத்தெரிந்திடும் வானோருந் தேவர்கள் தேவன்பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடிமுரிந்திடு வானை முயன்றிடு நீயே.
உரைmeaning
பாடல் #1327 இல் உள்ளபடி, அனைத்தையும் அதனதன் முறைப்படியே அறிந்துகொண்ட சாதகர்கள், தாமே அமரர்களாக ஆகிவிடும் முறைகளை அறிந்துகொள்வார்கள். அப்போது அவர்களுக்குத் தெரியவரும், விண்ணவர்களுக்கும் தேவர்களுக்கும் தலைவனாக இருப்பவனும், பெருங்கருணையில் உலகங்களுக்கு மழை போல் பொழியும் வானத்தைப் போன்றவனும், பாய்ந்துவரும் கங்கையை உலக நன்மைக்காகத் தன் தலையின்மேல் தாங்கி அதன் வேகத்தைத் தடுத்து அருளுகின்றவனுமான இறைவனை, சாதகர்கள் முழுவதும் உணர்ந்து அடையும்படி முயற்சி செய்யவேண்டும்.
As verse 1327 says, practitioners who have come to know everything in its proper manner will come to know the very ways by which they themselves become the immortals. At that point they will come to know the Lord, the master of the celestials and the devas, who is like a sky that rains down abundant grace upon the worlds, and who graciously bears the rushing Ganga upon his own head for the world's good, checking its force. Practitioners must strive to fully sense and attain this Lord.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1327 இல் உள்ளபடி, அனைத்தையும் அதனதன் முறைப்படியே அறிந்துகொண்ட சாதகர்கள், தாமே அமரர்களாக ஆகிவிடும் முறைகளை அறிந்துகொள்வார்கள்.
As verse 1327 says, practitioners who have come to know everything in its proper manner will come to know the very ways by which they themselves become the immortals.
- வரி 2Line 2
அப்போது அவர்களுக்குத் தெரியவரும், விண்ணவர்களுக்கும் தேவர்களுக்கும் தலைவனாக இருப்பவனும்,
At that point they will come to know the Lord, the master of the celestials and the devas,
- வரி 3Line 3
பெருங்கருணையில் உலகங்களுக்கு மழை போல் பொழியும் வானத்தைப் போன்றவனும், பாய்ந்துவரும் கங்கையை உலக நன்மைக்காகத் தன் தலையின்மேல் தாங்கி அதன் வேகத்தைத் தடுத்து அருளுகின்றவனுமான இறைவனை,
who is like a sky that rains down abundant grace upon the worlds, and who graciously bears the rushing Ganga upon his own head for the world's good, checking its force,
- வரி 4Line 4
சாதகர்கள் முழுவதும் உணர்ந்து அடையும்படி முயற்சி செய்யவேண்டும்.
and practitioners must strive to fully sense and attain this Lord.
திருமந்திரம் பாடல் #1328





