திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1329

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நீர்தரு சக்கர நேர்தரு வண்ணங்கள்பார்மதி யும்மிறீ மன்சிறீ யீரானதாரணி யும்புகழ்த் தையல் நல்லாடன்னைக்காரணி யும்பொழிற் கண்டு கொள்ளீரே.

உரை

பாடல் #1328 இல் உள்ளபடி, சாதகர்கள் சாதகம் செய்து பெறும் நவாக்கிரி சக்கரம், அவரது சாதகத்திற்குச் சமமாகத் தரும் பல வகைப் பலன்களில், முதலில் உலகில் உள்ள மொத்த அறிவும் 'ஹ்ரீம்' மற்றும் 'ஸ்ரீம்' ஆகிய இரண்டு பீஜ மந்திரங்களின் மூலமே கிடைக்கும். அதன்பின், அழகிய பூக்களை மாலையாக அணிந்திருக்கும், அனைத்து விதமான புகழ்களுக்கும் உரியவளான இறைவியோடு சேர்ந்து உலக நன்மைக்காகத் திருக்கூத்து ஆடிக்கொண்டிருக்கும் இறைவனை, மேகங்கள் மூடியிருக்கும் அழகிய பூக்கள் பூத்து விளங்கும் சோலையில், சாதகர்கள் தமது கண்களால் தரிசனம் செய்துகொள்வார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1328 இல் உள்ளபடி, சாதகர்கள் சாதகம் செய்து பெறும் நவாக்கிரி சக்கரம், அவரது சாதகத்திற்குச் சமமாகத் தரும் பல வகைப் பலன்களில் முதலில் உலகில் உள்ள மொத்த அறிவும் கிடைக்கும்.

  • வரி 2

    அது 'ஹ்ரீம்' மற்றும் 'ஸ்ரீம்' ஆகிய இரண்டு பீஜ மந்திரங்களின் மூலமே கிடைக்கும்.

  • வரி 3

    அதன்பின், அழகிய பூக்களை மாலையாக அணிந்திருக்கும், அனைத்து விதமான புகழ்களுக்கும் உரியவளான இறைவியோடு சேர்ந்து உலக நன்மைக்காகத் திருக்கூத்து ஆடிக்கொண்டிருக்கும் இறைவனை,

  • வரி 4

    மேகங்கள் மூடியிருக்கும் அழகிய பூக்கள் பூத்து விளங்கும் சோலையில், சாதகர்கள் தமது கண்களால் தரிசனம் செய்துகொள்வார்கள்.

திருமந்திரம் பாடல் #1329

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout