தொடர்ந்து படிக்கread this section continuously
கண்டுகொ ழுந்தனி நாயகி தன்னையுமொண்டுகொ ழுமுக வசியம தாயிடும்பண்டுகொ ழும்பர மாய பரஞ்சுடர்நின்று கொளுநிலை பேறுடை யாளே.
உரைmeaning
பாடல் #1329 இல் உள்ளபடி, சாதகர்கள் தமக்குள் தரிசிக்கும் இறைவனோடு சேர்ந்தும், நவாக்கிரி சக்கரத்தில் தனி நாயகியாகவும் இருக்கும் இறைவியையும் இறைவனையும் ஒன்றாகச் சேர்த்து எந்த அளவிற்குத் தியானிக்கிறார்களோ, அந்த அளவிற்கு இறைசக்தியைத் தமக்குள் கிரகித்துக்கொள்ளும் கருவியாக நவாக்கிரி சக்கரம் ஆகிவிடும். அதன்பின், ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாகவும் பரம்பொருளாகவும் இருக்கும் இறைவனையும், பராசக்தியின் பேரொளியான இறைவியையும், சாதகர்கள் தமக்குள் மனத்தால் வடித்துக்கொண்ட நவாக்கிரி சக்கரத்தில் நிலைநிறுத்திக்கொள்ளும் உயர்வான நிலையைப் பெறும் மிகப் பெரிய வரத்தை இறைவியானவள் கொடுத்தருளுவாள்.
As verse 1329 says, to the exact degree that practitioners meditate, joining together the Lord whom they behold within themselves and the Goddess, the sole mistress of the Navakkiri Chakra, the Navakkiri Chakra becomes the very instrument through which they take in the divine power within themselves. After that, the Goddess graciously grants the very great boon of the exalted state of establishing, within the Navakkiri Chakra they have shaped within their own mind, both the Lord, who from the beginning has been the master and the supreme being of all things, and the Goddess, the radiant light of Parashakti.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1329 இல் உள்ளபடி, சாதகர்கள் தமக்குள் தரிசிக்கும் இறைவனோடு சேர்ந்தும், நவாக்கிரி சக்கரத்தில் தனி நாயகியாகவும் இருக்கும் இறைவியையும் இறைவனையும் ஒன்றாகச் சேர்த்துத் தியானிக்க வேண்டும்.
As verse 1329 says, practitioners must meditate, joining together the Lord whom they behold within themselves and the Goddess, the sole mistress of the Navakkiri Chakra.
- வரி 2Line 2
எந்த அளவிற்குத் தியானிக்கிறார்களோ, அந்த அளவிற்கு இறைசக்தியைத் தமக்குள் கிரகித்துக்கொள்ளும் கருவியாக நவாக்கிரி சக்கரம் ஆகிவிடும்.
To the exact degree that they meditate, the Navakkiri Chakra becomes the very instrument through which they take in the divine power within themselves.
- வரி 3Line 3
அதன்பின், ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாகவும் பரம்பொருளாகவும் இருக்கும் இறைவனையும், பராசக்தியின் பேரொளியான இறைவியையும், சாதகர்கள் தமக்குள் மனத்தால் வடித்துக்கொண்ட நவாக்கிரி சக்கரத்தில் நிலைநிறுத்திக்கொள்வார்கள்.
After that, the Lord, who from the beginning has been the master and the supreme being of all things, and the Goddess, the radiant light of Parashakti, are established by practitioners within the Navakkiri Chakra they have shaped within their own mind.
- வரி 4Line 4
இந்த உயர்வான நிலையைப் பெறும் மிகப் பெரிய வரத்தை இறைவியானவள் கொடுத்தருளுவாள்.
And the Goddess graciously grants the very great boon of attaining this exalted state.
திருமந்திரம் பாடல் #1330





