திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1331

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பேறுடை யாடன் பெருமையை யெண்ணிடில்நாடுடை யார்களும் நம்வச மாயிடுமாறுடை யார்களும் வாழ்வது தன்னிலைக்கூறுடை யாளையுங் கூறுமின் னீரே.

உரை

பாடல் #1330 இல் உள்ளபடி, அருளுகின்ற அனைத்து வரங்களையும் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியின் அருமை பெருமைகளை ஆராய்ந்து எண்ணிப் பார்த்தால், கிடைப்பது இதுவே: இவ்வுலகம் செயல்படுவதற்கான நன்மைகளைத் தன் வசத்தில் வைத்திருக்கும் ஞானிகளும் சாதகர்கள்மேல் அன்பு கொண்டு அவரை நாடி வருவார்கள். இறையருளை அடைவதற்கான வழிகளைத் தன் வசத்தில் வைத்திருக்கும் அந்த ஞானிகள் வாழும் நிலையை சாதகர்களும் கண்டுகொண்டு அதன்படியே வாழ்வார்கள். இந்த வழியில் வாழும் அனைவரிலும் ஒரு பகுதியாக இருந்து, அவர்களைத் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியானவளின் பெருமைகளை, சாதகர்களும் போற்றி எடுத்துக் கூறுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1330 இல் உள்ளபடி, அருளுகின்ற அனைத்து வரங்களையும் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியின் அருமை பெருமைகளை ஆராய்ந்து எண்ணிப் பார்த்தால், கிடைப்பது இதுவே:

  • வரி 2

    இவ்வுலகம் செயல்படுவதற்கான நன்மைகளைத் தன் வசத்தில் வைத்திருக்கும் ஞானிகளும் சாதகர்கள்மேல் அன்பு கொண்டு அவரை நாடி வருவார்கள்.

  • வரி 3

    இறையருளை அடைவதற்கான வழிகளைத் தன் வசத்தில் வைத்திருக்கும் அந்த ஞானிகள் வாழும் நிலையை சாதகர்களும் கண்டுகொண்டு அதன்படியே வாழ்வார்கள்.

  • வரி 4

    இந்த வழியில் வாழும் அனைவரிலும் ஒரு பகுதியாக இருந்து, அவர்களைத் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியானவளின் பெருமைகளை, சாதகர்களும் போற்றி எடுத்துக் கூறுவார்கள்.

திருமந்திரம் பாடல் #1331

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout