தொடர்ந்து படிக்கread this section continuously
கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியைஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வெனமாறுமின் வையம் வரும்வழி தன்னையும்தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே
உரைmeaning
பாடல் #1331 இல் உள்ளபடி, எட்டு திசைகளுக்கும் தலைவியாக இருக்கின்ற இறைவியின் அருமைகளையும் பெருமைகளையும் தகுதியானவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று பாடல் கூறுகிறது. அப்போது, இந்த உலகில் நன்மைகளை நடத்துகின்ற, இறப்பில்லா நிலை பெற்ற அமரர்களின் வாழ்க்கையைப் போலவே சாதகர்களின் வாழ்க்கையும் மாறும். அதன்படி, இந்த உலகில் இயற்கையாகவே வருகின்ற வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் அமரர்களின் வாழ்க்கை முறைக்கேற்ற வகையில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் பாடல் கூறுகிறது. அனைத்திற்கும் தலைவியாக இருக்கின்ற இறைவியின் வணங்கத்தக்க திருவடிகளை எப்போதும் சேர்ந்தே இருந்து, இதையெல்லாம் செய்யும் முறைகளைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1331 says, the verse declares that the wonders and greatness of the Goddess, who is mistress of all eight directions, should be proclaimed to those who are worthy. Then the life of practitioners will change to become like the life of the immortals, who conduct what is good in this world and have attained the state without death. Accordingly, the verse also declares that all the events that naturally come in this world's life should be turned into forms fitting the immortals' way of living. And it closes by declaring that one should always remain united with the worshipful sacred feet of the Goddess who is mistress of all, and should come to know clearly the ways of doing all this.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எட்டு திசைகளுக்கும் தலைவியாக இருக்கின்ற இறைவியின் அருமைகளையும் பெருமைகளையும் தகுதியானவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
One should proclaim to those who are worthy the wonders and greatness of the Goddess who is mistress of all eight directions.
- வரி 2Line 2
அப்போது, இந்த உலகில் நன்மைகளை நடத்துகின்ற, இறப்பில்லா நிலை பெற்ற அமரர்களின் வாழ்க்கையைப் போலவே சாதகர்களின் வாழ்க்கையும் மாறும்.
Then the life of practitioners will change to become like the life of the immortals, who conduct what is good in this world and have attained the state without death.
- வரி 3Line 3
இந்த உலகில் இயற்கையாகவே வருகின்ற வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் அமரர்களின் வாழ்க்கை முறைக்கேற்ற வகையில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
All the events that naturally come in this world's life should be turned into forms fitting the immortals' way of living.
- வரி 4Line 4
அனைத்திற்கும் தலைவியாக இருக்கின்ற இறைவியின் வணங்கத்தக்க திருவடிகளை எப்போதும் சேர்ந்தே இருந்து, இதையெல்லாம் செய்யும் முறைகளைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
One should always remain united with the worshipful sacred feet of the Goddess who is mistress of all, and should come to know clearly the ways of doing all this.
திருமந்திரம் பாடல் #1332





