தொடர்ந்து படிக்கread this section continuously
சேவடி சேரச் செறிய விருந்தவர்நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்பூவடி யிட்டுப் பொலிய விருந்தவர்மாவடி காணும் வகையறி வாரே.
உரைmeaning
பாடல் #1332 இல் உள்ளபடி, இறைவியின் வணங்கத்தக்க திருவடிகளைச் சேர்ந்தே இருந்து அதை இடைவிடாமல் நினைத்துப் பக்குவம் பெற்றிருக்கின்ற சாதகர்கள், மந்திரங்களை ஓதித் தியானத்தில் இருந்து போற்றி வணங்குபவர்களாகவும், இறைவியின் பூப்போன்ற திருவடிகளைத் தமது மனத்தில் பதியவைத்துப் பிரகாசம் பெற்றிருக்கின்றவர்களாகவும், இறைவியின் மாபெரும் திருவடிகளைக் கண்டு தரிசிக்கும் முறைகளை முழுவதும் அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.
As verse 1332 says, the practitioners who remain united with the Goddess's worshipful sacred feet, thinking of them without ceasing and thereby attaining maturity, will be ones who recite mantras and praise and worship her in meditation, ones whose minds are made to shine by fixing upon them the Goddess's flower-like sacred feet, and ones who fully know the ways of beholding and worshipping her great sacred feet.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவியின் வணங்கத்தக்க திருவடிகளைச் சேர்ந்தே இருந்து அதை இடைவிடாமல் நினைத்துப் பக்குவம் பெற்றிருக்கின்ற சாதகர்கள்,
The practitioners who remain united with the Goddess's worshipful sacred feet, thinking of them without ceasing and thereby attaining maturity,
- வரி 2Line 2
மந்திரங்களை ஓதித் தியானத்தில் இருந்து போற்றி வணங்குபவர்களாகவும் இருப்பார்கள்.
will be ones who recite mantras and praise and worship her in meditation.
- வரி 3Line 3
இறைவியின் பூப்போன்ற திருவடிகளைத் தமது மனத்தில் பதியவைத்துப் பிரகாசம் பெற்றிருக்கின்றவர்களாகவும் இருப்பார்கள்.
They will also be ones whose minds are made to shine by fixing upon them the Goddess's flower-like sacred feet.
- வரி 4Line 4
இறைவியின் மாபெரும் திருவடிகளைக் கண்டு தரிசிக்கும் முறைகளை முழுவதும் அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.
And they will fully know the ways of beholding and worshipping her great sacred feet.
திருமந்திரம் பாடல் #1333





