திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1325

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நேர்தரு மத்திரு நாயகி யானவள்யாதொரு வண்ண மறிந்திடும் பொற்பூவைகார்தரு வண்ணங் கருதின கைவரும்நாள்தரு வண்ணம் நடத்திடு நீயே.

உரை

பாடல் #1324 இல் உள்ளபடி தியானிக்கின்ற மந்திரத்தைச் சாற்றுகின்றபோது அதற்கு இணையான பலன்களைத் தந்தருளும், திருவருள் தலைவியான இறைவியானவள் எத்தகைய வண்ணத்தில் இருக்கின்றாள் என்பதைத் தமக்குள் தரிசித்து அறிந்துகொண்டால், அவள் தங்கம் போல் ஜொலிக்கும் பிரகாசத்துடனும், மென்மையான பூப் போலவும் இருப்பதை உணரலாம். மழையைக் கொடுக்கும் மேகத்தைப் போலவே இறைவியானவள் தன்னை நினைத்து வணங்கும் எவருக்கும் அவர்கள் எண்ணியது கிடைக்கும்படி செய்து அருளுவாள் என்பதை உணர்ந்துகொண்டு, சாதகர்கள் தினந்தோறும் அவள் அருளுகின்ற விதத்திலேயே உலக நன்மைக்குத் தேவையானதை நடத்துவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1324 இல் உள்ளபடி தியானிக்கின்ற மந்திரத்தைச் சாற்றுகின்றபோது அதற்கு இணையான பலன்களைத் தந்தருளும், திருவருள் தலைவியான இறைவியானவள் எத்தகைய வண்ணத்தில் இருக்கின்றாள் என்பதைத் தமக்குள் தரிசித்து அறிந்துகொள்ளலாம்.

  • வரி 2

    அவ்வாறு அறியும்போது, அவள் தங்கம் போல் ஜொலிக்கும் பிரகாசத்துடனும், மென்மையான பூப் போலவும் இருப்பதை உணரலாம்.

  • வரி 3

    மழையைக் கொடுக்கும் மேகத்தைப் போலவே இறைவியானவள் தன்னை நினைத்து வணங்கும் எவருக்கும் அவர்கள் எண்ணியது கிடைக்கும்படி செய்து அருளுவாள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

  • வரி 4

    அதை உணர்ந்துகொண்டு, சாதகர்கள் தினந்தோறும் அவள் அருளுகின்ற விதத்திலேயே உலக நன்மைக்குத் தேவையானதை நடத்துவார்கள்.

திருமந்திரம் பாடல் #1325

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout