திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1324

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நினைத்திடு மச்சிறீயிக் கிறீ யீராநினைத்திடு சக்கர மாதியு மீறுநினைத்திடு நெல்லொடு புல்வினை யுள்ளேநினைத்திடு மற்சனை நேர்தரு வாளே.

உரை

பாடல் #1323 இல் உள்ளபடி சாதகர் நினைத்துத் தியானிக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள 'ஸ்ரீம்' எனும் அட்சரத்தையும் 'ஹ்ரீம்' எனும் அட்சரத்தையும் முதலாகவும் முடிவாகவும் வைத்துத் தியானிக்கவேண்டும். அப்படித் தியானிக்கும்போது, நெல்லை விதைத்தால் அதிலிருந்து புல்லாக முளைத்து விளைவிக்கும் செயலைப் போலவே, மனத்திற்குள் சாதகர் நினைத்துத் தியானிக்கின்ற மந்திரத்தைச் சாற்றுகின்றபோது, அதற்கு இணையான பலன்களைச் சக்கரத்திலிருக்கும் சக்தியானவள் தந்து அருளுவாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1323 இல் உள்ளபடி சாதகர் நினைத்துத் தியானிக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள 'ஸ்ரீம்' எனும் அட்சரத்தையும் 'ஹ்ரீம்' எனும் அட்சரத்தையும் முதலாகவும் முடிவாகவும் வைத்துத் தியானிக்கவேண்டும்.

  • வரி 2

    அப்படித் தியானிக்கும்போது, நெல்லை விதைத்தால் அதிலிருந்து புல்லாக முளைத்து விளைவிக்கும் செயலைப் போலவே பலன் விளையும்.

  • வரி 3

    மனத்திற்குள் சாதகர் நினைத்துத் தியானிக்கின்ற மந்திரத்தைச் சாற்றுகின்றபோது,

  • வரி 4

    அதற்கு இணையான பலன்களைச் சக்கரத்திலிருக்கும் சக்தியானவள் தந்து அருளுவாள்.

திருமந்திரம் பாடல் #1324

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout