திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1323

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடைகொண்டிடு முன்னே குறித்த வினைகளைவென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்குநின்றிடு சக்கரம் நினைக்கு மளவே.

உரை

பாடல் #1322 இல் உள்ளபடி, சாதகர் கண்டு அறிந்துகொண்ட நவாக்கிரி சக்கரத்தை, சாதகத்தின் மூலம் வெள்ளி போன்ற தூய்மையுடனும், பொன் போன்ற பிரகாசத்துடனும், செம்பு போன்ற உறுதியுடனும் மனத்திற்குள் உள்வாங்கி வைக்கும்போது, சாதகரின் இப்பிறவிக்கு முன் பிறவியிலிருந்தே தொடர்ந்துவரும் அனைத்து வினைகளையும் இந்தச் சக்கரத்தின் சக்தி மண்டலம் வென்று அழித்துவிடும். ஐந்து புலன்களையும் வெல்வதற்கும் இது வழி கொடுக்கும். இந்த நவாக்கிரி சக்கரம் சாதகர் எந்த அளவிற்குத் தியானிக்கின்றாரோ, அந்த அளவுக்கு நிலைபெற்று நிற்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1322 இல் உள்ளபடி, சாதகர் கண்டு அறிந்துகொண்ட நவாக்கிரி சக்கரத்தை, சாதகத்தின் மூலம் வெள்ளி போன்ற தூய்மையுடனும், பொன் போன்ற பிரகாசத்துடனும், செம்பு போன்ற உறுதியுடனும் மனத்திற்குள் உள்வாங்கி வைக்கும்போது,

  • வரி 2

    சாதகரின் இப்பிறவிக்கு முன் பிறவியிலிருந்தே தொடர்ந்துவரும் அனைத்து வினைகளையும் இந்தச் சக்கரத்தின் சக்தி மண்டலம் வென்று அழித்துவிடும்.

  • வரி 3

    ஐந்து புலன்களையும் வெல்வதற்கும் இது வழி கொடுக்கும்.

  • வரி 4

    இந்த நவாக்கிரி சக்கரம் சாதகர் எந்த அளவிற்குத் தியானிக்கின்றாரோ, அந்த அளவுக்கு நிலைபெற்று நிற்கும்.

திருமந்திரம் பாடல் #1323

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout