தொடர்ந்து படிக்கread this section continuously
நலந்தரு ஞானமுங் கல்வியு மெல்லாமுரந்தரு வல்வினை யும்மை விட்டோடிச்சிரந்தரு தீவினை செய்வ தகற்றிவரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.
உரைmeaning
நவாக்கிரி சக்கரத்தைச் சாதகம் செய்யும் சாதகர்களுக்கு, பாடல் #1321 இல் உள்ளபடி மூன்று விதமான நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்: இறைவனை அடையவேண்டிய ஞானமும், உலக அறிவை அறிகின்ற கல்விகள் அனைத்தும், மனபலமும் கிடைக்கும். அதன் பயனாகப் பல பிறவிகளாகத் தொடர்ந்துவரும் வலிமையான வினைகள் அனைத்தும் சாதகரை விட்டு ஓடிவிடும். மேன்மையான நிலையும் கிடைத்து, இனிமேல் தீமையான வினைகள் எதுவும் செய்யும் நிலையும் இல்லாமல் போகும். நினைத்தவை அடையும் வரங்களும் கிடைத்து, இறைவனின் சோதி வடிவத்தை அடையும் நிலையும் கிடைப்பதைக் காணலாம்.
For practitioners who take up the sadhana of the Navakkiri Chakra, as verse 1321 says, all three kinds of good are granted: the wisdom needed to attain God, all the learning that knows the world, and strength of mind are granted. As their fruit, all the powerful deeds that have followed through many births flee, leaving the practitioner. An exalted state is granted, and the state of performing any further evil deeds ceases altogether. Boons to attain what is wished for are granted, and it can be seen that the state of attaining the Lord's radiant form is granted too.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நவாக்கிரி சக்கரத்தைச் சாதகம் செய்யும் சாதகர்களுக்கு, பாடல் #1321 இல் உள்ளபடி இறைவனை அடையவேண்டிய ஞானமும், உலக அறிவை அறிகின்ற கல்விகள் அனைத்தும், மனபலமும் கிடைக்கும்.
For practitioners who take up the sadhana of the Navakkiri Chakra, as verse 1321 says, the wisdom needed to attain God, all the learning that knows the world, and strength of mind are granted.
- வரி 2Line 2
அதன் பயனாகப் பல பிறவிகளாகத் தொடர்ந்துவரும் வலிமையான வினைகள் அனைத்தும் சாதகரை விட்டு ஓடிவிடும்.
As their fruit, all the powerful deeds that have followed through many births flee, leaving the practitioner.
- வரி 3Line 3
மேன்மையான நிலையும் கிடைத்து, இனிமேல் தீமையான வினைகள் எதுவும் செய்யும் நிலையும் இல்லாமல் போகும்.
An exalted state is granted, and the state of performing any further evil deeds ceases altogether.
- வரி 4Line 4
நினைத்தவை அடையும் வரங்களும் கிடைத்து, இறைவனின் சோதி வடிவத்தை அடையும் நிலையும் கிடைப்பதைக் காணலாம்.
Boons to attain what is wished for are granted, and it can be seen that the state of attaining the Lord's radiant form is granted too.
திருமந்திரம் பாடல் #1322





