தொடர்ந்து படிக்கread this section continuously
நவாக்கிரி யாவது நானறி வித்தைநவாக்கிரி யுள்ளெழும் நன்மைக ளெல்லாம்நவாக்கிரி மந்திரம் நாவுள்ளே யோதநவாக்கிரி சத்தி நலந்தருந் தானே.
உரைmeaning
ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரமாவது, யான் அறிந்துகொண்ட கலையாகும். அதனால் கர்மாக்களை அழித்துப் பிறவி அறுப்பது, இனியும் கர்மங்கள் சேராமல் தடுப்பது, இறைவனைத் தமக்குள் உணர்ந்து அடைவது ஆகிய மூன்று விதமான நன்மைகளும் இந்தச் சக்கரத்திற்குள்ளிருந்தே கிடைக்கும். இந்த மந்திரத்தை ஓதினால், சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள் அனைத்து நலங்களையும் தானே கொடுத்து அருளுவார்கள்.
The Navakkiri Chakra, made of the letters that are the very form of the nine powers, is the art I myself have come to know. Through it, three kinds of good are granted from within this very chakra: the destruction of karma and the cutting off of rebirth, the prevention of further karma from ever attaching itself, and the realization and attainment of God within oneself. If this mantra is recited, the powers enthroned in this chakra will themselves grant every good thing.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரமாவது, யான் அறிந்துகொண்ட கலையாகும்.
The Navakkiri Chakra, made of the letters that are the very form of the nine powers, is the art I myself have come to know.
- வரி 2Line 2
அதனால் கர்மாக்களை அழித்துப் பிறவி அறுப்பது, இனியும் கர்மங்கள் சேராமல் தடுப்பது, இறைவனைத் தமக்குள் உணர்ந்து அடைவது ஆகிய மூன்று விதமான நன்மைகளும் கிடைக்கும்.
Through it, three kinds of good are granted: the destruction of karma and the cutting off of rebirth, the prevention of further karma from ever attaching itself, and the realization and attainment of God within oneself.
- வரி 3Line 3
இந்த மூன்று விதமான நன்மைகளும் இந்தச் சக்கரத்திற்குள்ளிருந்தே கிடைக்கும்.
All three kinds of good are granted from within this very chakra.
- வரி 4Line 4
இந்த மந்திரத்தை ஓதினால், சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள் அனைத்து நலங்களையும் தானே கொடுத்து அருளுவார்கள்.
If this mantra is recited, the powers enthroned in this chakra will themselves grant every good thing.
திருமந்திரம் பாடல் #1321





