திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1348

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சேர்ந்தவ ரென்றுந் திசையொளி யானவர்காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்பாய்ந்தெழு முள்ளொளி பாரிற் பரந்ததுமாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

உரை

பாடல் #1347 இல் உள்ளபடி, நவாக்கிரி சக்கரத்தைச் சேர்ந்திருக்கின்ற சாதகர்கள் எப்போதும் அனைத்துத் திசைகளுக்கும் பரவிச்செல்லும் ஒளியாகவே இருப்பார்கள் என்று பாடல் கூறுகிறது. இதுவரை பல பிறவிகளாக அவர்களைத் தொடர்ந்துவருகின்ற உச்ச வினைகள், இனிமேல் தொடராமல் அழிந்து, அவர்களுக்கு எந்த வினையும் இல்லாமல் ஆகிவிடும். அவர்களுக்குள் இருந்து வேகமாக மேலெழுந்துவருகின்ற ஞானமாகிய ஒளியானது உலகம் முழுவதும் பரந்து விரியும். அதன்பிறகு, தம்மை நாடிவரும் தகுதியானவர்களுடைய மாயை என்னும் இருளை அழித்து ஞானமாகிய ஒளியைக் கொடுக்கின்றவர்களாக அச்சாதகர்கள் இருப்பார்கள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    நவாக்கிரி சக்கரத்தைச் சேர்ந்திருக்கின்ற சாதகர்கள் எப்போதும் அனைத்துத் திசைகளுக்கும் பரவிச்செல்லும் ஒளியாகவே இருப்பார்கள்.

  • வரி 2

    இதுவரை பல பிறவிகளாக அவர்களைத் தொடர்ந்துவருகின்ற உச்ச வினைகள், இனிமேல் தொடராமல் அழிந்து, அவர்களுக்கு எந்த வினையும் இல்லாமல் ஆகிவிடும்.

  • வரி 3

    அவர்களுக்குள் இருந்து வேகமாக மேலெழுந்துவருகின்ற ஞானமாகிய ஒளியானது உலகம் முழுவதும் பரந்து விரியும்.

  • வரி 4

    அதன்பிறகு, தம்மை நாடிவரும் தகுதியானவர்களுடைய மாயை என்னும் இருளை அழித்து ஞானமாகிய ஒளியைக் கொடுக்கின்றவர்களாக அச்சாதகர்கள் இருப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1348

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout