தொடர்ந்து படிக்கread this section continuously
ஒளியது ஹௌ முதல்ஹ்ரீ மதுவீறாங்களியது சக்கரங் கண்டறி வார்க்குத்தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்பளியது பஞ்சாக் கரமது வாமே.
உரைmeaning
பாடல் #1348 இல் உள்ளபடி, தகுதியானவர்களுக்கு மாயையை அழித்து ஞானத்தைக் கொடுக்கின்ற சாதகர்களுக்குள் இருக்கின்ற ஒளிமயமான நவாக்கிரி சக்கரத்தை முறைப்படி அமைத்துத் தியானித்தால், அது உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கும் என்று பாடல் கூறுகிறது. இந்த நவாக்கிரி சக்கரத்தைத் தமக்குள் கண்டறிந்துகொள்ளும் சாதகர்களுக்கு, உண்மைப் பொருளைத் தெளிவுபடுத்துவதாகவும், உண்மை ஞானத்தைக் கொடுப்பதாகவும், எண்ணங்கள் தெளிவுபெறும் அறிவைக் கற்றுத் தருகின்ற இடமாகவும் அதுவே இருக்கும். அது மட்டுமின்றி, இறைவனின் எழுத்து வடிவான ஐந்து அட்சரங்களைக் கொண்ட 'நமசிவாய' மந்திரமாகவும் அதுவே இருக்கிறது என்று பாடல் முடிக்கிறது.
As verse 1348 says, if practitioners, who destroy illusion and give wisdom to those who are worthy, arrange in due order and meditate upon the radiant Nine-Letter Chakra within themselves, it will grant supreme bliss within, the verse declares. For practitioners who come to discern this Nine-Letter Chakra within themselves, it will itself be the one that makes the true substance clear, that gives true wisdom, and that is the very place that teaches the discernment by which thoughts grow clear. And besides this, it closes by declaring, it is itself the five-syllabled mantra "Namasivaya," God's own form in letters.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தகுதியானவர்களுக்கு மாயையை அழித்து ஞானத்தைக் கொடுக்கின்ற சாதகர்களுக்குள் இருக்கின்ற ஒளிமயமான நவாக்கிரி சக்கரத்தை முறைப்படி அமைத்துத் தியானித்தால்,
If practitioners, who destroy illusion and give wisdom to those who are worthy, arrange in due order and meditate upon the radiant Nine-Letter Chakra within themselves,
- வரி 2Line 2
அது உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கும்; இந்த நவாக்கிரி சக்கரத்தைத் தமக்குள் கண்டறிந்துகொள்ளும் சாதகர்களுக்கு,
it will grant supreme bliss within; for practitioners who come to discern this Nine-Letter Chakra within themselves,
- வரி 3Line 3
உண்மைப் பொருளைத் தெளிவுபடுத்துவதாகவும், உண்மை ஞானத்தைக் கொடுப்பதாகவும், எண்ணங்கள் தெளிவுபெறும் அறிவைக் கற்றுத் தருகின்ற இடமாகவும் அதுவே இருக்கும்.
it will itself be the one that makes the true substance clear, that gives true wisdom, and that is the very place that teaches the discernment by which thoughts grow clear.
- வரி 4Line 4
அது மட்டுமின்றி, இறைவனின் எழுத்து வடிவான ஐந்து அட்சரங்களைக் கொண்ட 'நமசிவாய' மந்திரமாகவும் அதுவே இருக்கிறது.
And besides this, it is itself the five-syllabled mantra "Namasivaya," God's own form in letters.
திருமந்திரம் பாடல் #1349





