தொடர்ந்து படிக்கread this section continuously
புகையில்லைச் சொல்லிய பொன்னொளி யுண்டங்குகையில்லைக் கொல்வ திலாமை யினாலேவகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.
உரைmeaning
பாடல் #1346 இல் உள்ளபடி, இறை நினைப்பிலேயே திளைத்திருக்கின்ற சாதகர்களின் சிந்தனைக்குள் எந்தவிதத் துன்பகரமான எண்ணமும் இல்லை என்று பாடல் கூறுகிறது. பாடல் #1344 இல் சொல்லியிருப்பதைப் போலவே, தங்கநிறத்தில் பிரகாசிக்கும் ஒளிபொருந்திய உடலும் அவருக்கு உண்டு. ஒளிபொருந்திய சாதகர் இருக்கும் இடத்தில் மாபெரும் பாதகங்கள் எதுவும் இல்லை; ஏனெனில் அவரைச் சுற்றி எந்த உயிரும் இன்னொரு உயிரைக் கொல்லுகின்ற எண்ணமே இல்லாமல் இருக்கும் என்று பாடல் கூறுகிறது. இந்த உலகில் வாழ்கின்ற அசையும் உயிர்கள் அனைத்தையும் பலவகைகளாகப் பிரித்துப் பாராமல் இறை அம்சமாகவே அவர் பார்க்கிறார். இவ்வாறு நவாக்கிரி சக்கரத்தைச் சேர்ந்திருக்கின்ற சாதகர்களுக்கு முடிவு என்பதும் இல்லை என்று பாடல் முடிக்கிறது.
As verse 1346 says, no sorrowful thought remains in the minds of practitioners immersed in the thought of God, the verse declares. As said in verse 1344, they also have a radiant body shining with golden light. Where such a radiant practitioner dwells, the verse declares, no great calamity occurs, because no living being around him harbours even the thought of killing another. He looks upon all the moving beings that live in this world not as divided into many kinds but as a portion of God alone. And thus, the verse closes by declaring, there is no end for the practitioners who remain united with the Nine-Letter Chakra.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறை நினைப்பிலேயே திளைத்திருக்கின்ற சாதகர்களின் சிந்தனைக்குள் எந்தவிதத் துன்பகரமான எண்ணமும் இல்லை; பாடல் #1344 இல் சொல்லியிருப்பதைப் போலவே, தங்கநிறத்தில் பிரகாசிக்கும் ஒளிபொருந்திய உடலும் அவருக்கு உண்டு.
No sorrowful thought remains in the minds of practitioners immersed in the thought of God; as said in verse 1344, they also have a radiant body shining with golden light.
- வரி 2Line 2
ஒளிபொருந்திய சாதகர் இருக்கும் இடத்தில் மாபெரும் பாதகங்கள் எதுவும் இல்லை; ஏனெனில் அவரைச் சுற்றி எந்த உயிரும் இன்னொரு உயிரைக் கொல்லுகின்ற எண்ணமே இல்லாமல் இருக்கும்.
Where such a radiant practitioner dwells, no great calamity occurs, because no living being around him harbours even the thought of killing another.
- வரி 3Line 3
இந்த உலகில் வாழ்கின்ற அசையும் உயிர்கள் அனைத்தையும் பலவகைகளாகப் பிரித்துப் பாராமல் இறை அம்சமாகவே அவர் பார்க்கிறார்.
He looks upon all the moving beings that live in this world not as divided into many kinds but as a portion of God alone.
- வரி 4Line 4
இவ்வாறு நவாக்கிரி சக்கரத்தைச் சேர்ந்திருக்கின்ற சாதகர்களுக்கு முடிவு என்பதும் இல்லை.
And thus there is no end for the practitioners who remain united with the Nine-Letter Chakra.
திருமந்திரம் பாடல் #1347





