தொடர்ந்து படிக்கread this section continuously
அறிந்திடுஞ் சக்கர மற்சனை யோடேயறிந்திடும் வையத்திடர் வகை காணில்மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யிற்பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே.
உரைmeaning
பாடல் #1345 இல் உள்ளபடி, இறைவியைத் தமக்குள் முழுவதுமாக அறிந்துகொண்ட சாதகர்கள், அவள் வீற்றிருக்கும் நவாக்கிரி சக்கரத்தைத் தமக்குள்ளேயே பூஜித்து வந்தால், உலகத்திலுள்ள அனைத்து வகைத் துன்பங்களையும் கண்டறிந்து அவற்றிலிருந்து விலகி இருக்க முடியும் என்று பாடல் கூறுகிறது. இந்த நிலையை அடைந்த சாதகர்களைப் பகைவர்களைத் தடுத்து நாட்டு மக்களைக் காக்கின்ற பெரும் அரசர்களும் அவர் இருக்கும் இடம் தேடிவந்து வணங்குவார்கள். அரசர்களும் வந்து வணங்கினாலும், உலகப் பற்றில்லாமல் இறை நினைப்பிலேயே திளைத்திருக்கின்ற சாதகர்களின் சிந்தனைக்குள் எந்தவிதத் துன்பகரமான எண்ணங்களும் வராமல், அவர்கள் எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பார்கள் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1345 says, practitioners who have fully come to know the Goddess within themselves and who go on worshipping within themselves the Nine-Letter Chakra where she dwells will be able to perceive every kind of sorrow there is in the world and remain apart from it, the verse declares. Even great kings, who defend their lands and guard their people from enemies, will seek out and come to the place of practitioners who have attained this state and worship them. And even though kings come and worship them, no sorrowful thought will ever enter the minds of practitioners who, free of worldly attachment, remain immersed in the thought of God, and they will always dwell in supreme bliss, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவியைத் தமக்குள் முழுவதுமாக அறிந்துகொண்ட சாதகர்கள், அவள் வீற்றிருக்கும் நவாக்கிரி சக்கரத்தைத் தமக்குள்ளேயே பூஜித்து வந்தால்,
If practitioners who have fully come to know the Goddess within themselves go on worshipping within themselves the Nine-Letter Chakra where she dwells,
- வரி 2Line 2
உலகத்திலுள்ள அனைத்து வகைத் துன்பங்களையும் கண்டறிந்து அவற்றிலிருந்து விலகி இருக்க முடியும்.
they will be able to perceive every kind of sorrow there is in the world and remain apart from it.
- வரி 3Line 3
இந்த நிலையை அடைந்த சாதகர்களைப் பகைவர்களைத் தடுத்து நாட்டு மக்களைக் காக்கின்ற பெரும் அரசர்களும் அவர் இருக்கும் இடம் தேடிவந்து வணங்குவார்கள்.
Even great kings, who defend their lands and guard their people from enemies, will seek out and come to the place of practitioners who have attained this state and worship them.
- வரி 4Line 4
அரசர்களும் வந்து வணங்கினாலும், உலகப் பற்றில்லாமல் இறை நினைப்பிலேயே திளைத்திருக்கின்ற அவர்களின் சிந்தனைக்குள் எந்தவிதத் துன்பகரமான எண்ணங்களும் வராமல், அவர்கள் எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பார்கள்.
And even though kings come and worship them, no sorrowful thought will ever enter their minds, free of worldly attachment and immersed in the thought of God, and they will always dwell in supreme bliss.
திருமந்திரம் பாடல் #1346





