திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1345

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒளிக்கும் பராசத்தி யுள்ளே யமரிற்களிக்கு மிச்சிந்தை யுங்காரணங் காட்டித்தெளிக்கு மழையுடன் செல்வ முண்டாக்குமளிக்கு மிவளை யறிந்து கொள்வார்க்கே.

உரை

பாடல் #1343 இல் உள்ளபடி, அனைத்து உலகங்களுக்கும் பரந்து விரிந்திருக்கின்ற பேரொளியாக விளங்குகின்ற அசையும் சக்தியான இறைவி சாதகருக்குள் வந்து வீற்றிருந்தால், சாதகரின் மனம் பேரின்பத்தில் திளைத்திருக்கும் என்று பாடல் கூறுகிறது. அப்போது, அந்தப் பேரின்பத்திற்குக் காரணம் தாமே என்பதைச் சாதகருக்குக் காண்பித்துத் தெளிவுபடுத்துகிறாள் இறைவி. அது மட்டுமின்றி, நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் உண்மைப் பொருளை உணர்த்துகின்ற அருளையும் உருவாக்கி சாதகருக்கு அளிக்கிறாள். இவை அனைத்தையும், பேரொளியாக இருக்கின்ற இறைவியைத் தமக்குள் முழுவதுமாக அறிந்துகொண்ட சாதகர்களுக்கே இறைவி அருள்கிறாள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து உலகங்களுக்கும் பரந்து விரிந்திருக்கின்ற பேரொளியாக விளங்குகின்ற அசையும் சக்தியான இறைவி சாதகருக்குள் வந்து வீற்றிருந்தால்,

  • வரி 2

    சாதகரின் மனம் பேரின்பத்தில் திளைத்திருக்கும்; அப்போது, அந்தப் பேரின்பத்திற்குக் காரணம் தாமே என்பதைச் சாதகருக்குக் காண்பித்துத் தெளிவுபடுத்துகிறாள் இறைவி.

  • வரி 3

    அது மட்டுமின்றி, நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் உண்மைப் பொருளை உணர்த்துகின்ற அருளையும் உருவாக்கி சாதகருக்கு அளிக்கிறாள்.

  • வரி 4

    இவை அனைத்தையும், பேரொளியாக இருக்கின்ற இறைவியைத் தமக்குள் முழுவதுமாக அறிந்துகொண்ட சாதகர்களுக்கே இறைவி அருள்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1345

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout