தொடர்ந்து படிக்கread this section continuously
பரந்த கரமிரு பங்கய மேந்திக்குவிந்த கரமிரு கொய்த மாபாணிமலர்ந்தணி கொங்கைகள் முத்தார் பவளமிருந்தல் குலாடை மணிபொதிந் தன்றே.
உரைmeaning
பாடல் #1375 இல் சொன்னபடி, உலகமெங்கும் பரவி விரிந்திருக்கும் இறைவியின் திருக்கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்களை ஏந்திக்கொண்டிருக்கிறாள். மொக்குப் போல் குவிந்திருக்கும் அவளது வேறு இரு திருக்கரங்களும், அப்போதுதான் பறித்த மலர்களைப் போல மிகுந்த அழகு பொருந்தியிருக்கின்றன. மலர்ந்த மலர்களால் ஆன மாலையை அணிந்திருக்கும் அவளது திருமார்புகளில், முத்துக்களால் ஆன மாலையில் பவளத்தையும் பதித்து அணிந்திருக்கிறாள். அவளது திருஇடைக்குக் கீழே இருக்கும் ஆடையில் நவரத்தின மணிகளைப் பதித்து வைத்திருக்கும் பேரழகுடன், நினைத்த அக்கணமே தோன்றுகிறாள்.
As the previous verse says, the Goddess who is spread out and pervading everywhere in the world holds lotus flowers in two of her sacred hands. Her other two sacred hands, cupped like a bud, hold great beauty as though they were freshly plucked flowers. Upon her sacred breasts, adorned with a garland of blossomed flowers, she wears a garland of pearls set with coral. In the garment below her sacred waist she wears the nine gems set into it, and appears in that very moment one thinks of her, in this great beauty.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1375 இல் சொன்னபடி, உலகமெங்கும் பரவி விரிந்திருக்கும் இறைவியின் திருக்கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்களை ஏந்திக்கொண்டிருக்கிறாள்.
As the previous verse says, the Goddess who is spread out and pervading everywhere in the world holds lotus flowers in two of her sacred hands.
- வரி 2Line 2
மொக்குப் போல் குவிந்திருக்கும் அவளது வேறு இரு திருக்கரங்களும், அப்போதுதான் பறித்த மலர்களைப் போல மிகுந்த அழகு பொருந்தியிருக்கின்றன.
Her other two sacred hands, cupped like a bud, hold great beauty as though they were freshly plucked flowers.
- வரி 3Line 3
மலர்ந்த மலர்களால் ஆன மாலையை அணிந்திருக்கும் அவளது திருமார்புகளில், முத்துக்களால் ஆன மாலையில் பவளத்தையும் பதித்து அணிந்திருக்கிறாள்.
Upon her sacred breasts, adorned with a garland of blossomed flowers, she wears a garland of pearls set with coral.
- வரி 4Line 4
அவளது திருஇடைக்குக் கீழே இருக்கும் ஆடையில் நவரத்தின மணிகளைப் பதித்து வைத்திருக்கும் பேரழகுடன், நினைத்த அக்கணமே தோன்றுகிறாள்.
In the garment below her sacred waist she wears the nine gems set into it, and appears in that very moment one thinks of her, in this great beauty.
திருமந்திரம் பாடல் #1376





