தொடர்ந்து படிக்கread this section continuously
பேரொளி யாய பெரிய மலர்நடுச்சீரொளி யாகத் திகழ்தரு னாயகித்தாரொளி யாயவள் தன்னிறம் பொன்மையாய்ப்பாரொளி யாகப் பரந்துநின் றாளே.
உரைmeaning
பாடல் #1374 இல் சொன்னபடி, முக்தி அடைவதற்கான பெரு வழியாக இருக்கின்ற இறைவனின் பேரொளி உருவமானது, சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதள தாமரை மலரின் நடுவில் சீரும் சிறப்பும் பொருந்திய பேரொளியாகத் திகழும் நிலையைத் தருகின்ற தலைவியாகிய இறைவியே, சகஸ்ரதளத்தில் இருக்கும் தாமரை மலரின் ஒளியாக இருக்கிறாள். அவளது திருமேனி தங்கத்தைப் போலப் பிரகாசமாக ஜொலிக்கின்றது. அவளே உலகத்திற்கு ஒளி தருபவளாக எங்கும் பரவி விரிந்து நிற்கின்றாள்.
As the previous verse says, the Lord's own form of great light, the great way to attain liberation, comes to shine as light in the centre of the thousand-petalled lotus within the practitioner, granted by the Goddess who is its mistress, and she herself is that light of the lotus of the thousand petals. Her sacred form shines with the brightness of gold. She herself stands as the giver of light to the world, spread out and pervading everywhere.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1374 இல் சொன்னபடி, முக்தி அடைவதற்கான பெரு வழியாக இருக்கின்ற இறைவனின் பேரொளி உருவமானது, சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதள தாமரை மலரின் நடுவில் சீரும் சிறப்பும் பொருந்திய பேரொளியாகத் திகழும் நிலையைத் தருகின்ற தலைவியாகிய இறைவியே,
As the previous verse says, the Lord's own form of great light, the great way to attain liberation, comes to shine as light in the centre of the thousand-petalled lotus within the practitioner, granted by the Goddess who is its mistress,
- வரி 2Line 2
சகஸ்ரதளத்தில் இருக்கும் தாமரை மலரின் ஒளியாக இருக்கிறாள்.
and she herself is that light of the lotus of the thousand petals.
- வரி 3Line 3
அவளது திருமேனி தங்கத்தைப் போலப் பிரகாசமாக ஜொலிக்கின்றது.
Her sacred form shines with the brightness of gold.
- வரி 4Line 4
அவளே உலகத்திற்கு ஒளி தருபவளாக எங்கும் பரவி விரிந்து நிற்கின்றாள்.
She herself stands as the giver of light to the world, spread out and pervading everywhere.
திருமந்திரம் பாடல் #1375





