திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1374

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தரும் வழியாகிய தத்துவ ஞானங்குருவழி யாயங் குணங்களில் நின்றுகருவழி யாய கணக்கை யறுத்துப்பெருவழி யாகிய பேரொளி காணே.

உரை

பாடல் #1373 இல் சொன்னபடி, இறைவியின் அருளால் சாதகருக்குள்ளிருந்து மலர்ந்தெழும் ஓசையும் ஒளியும் சாதகருக்கான வழியாக நின்று, இறைவனை அடைவதற்கு வேண்டிய தத்துவ ஞானத்தைக் கொடுக்கின்றன. அவளே குருவாக வீற்றிருந்து, சாதகருக்குள் இருக்கும் குணங்களுக்கு ஏற்றபடியே நின்று காட்டி அருளுகிறாள். அதன்பிறகு, சாதகரின் முதற் பிறவியிலிருந்தே தொடர்ந்து வரும் கருவழிப் பிறவிகளுக்கும் இனிமேல் எடுக்க வேண்டிய பிறவிகளுக்கும் காரணமான கர்ம வினைக் கணக்குகளை நீக்கி, முக்தி அடைவதற்கான பெரு வழியாக இருக்கின்ற இறைவனின் பேரொளி உருவத்தைக் காணும்படி செய்து அருள்வாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1373 இல் சொன்னபடி, இறைவியின் அருளால் சாதகருக்குள்ளிருந்து மலர்ந்தெழும் ஓசையும் ஒளியும் சாதகருக்கான வழியாக நின்று, இறைவனை அடைவதற்கு வேண்டிய தத்துவ ஞானத்தைக் கொடுக்கின்றன.

  • வரி 2

    அவளே குருவாக வீற்றிருந்து, சாதகருக்குள் இருக்கும் குணங்களுக்கு ஏற்றபடியே நின்று காட்டி அருளுகிறாள்.

  • வரி 3

    அதன்பிறகு, சாதகரின் முதற் பிறவியிலிருந்தே தொடர்ந்து வரும் கருவழிப் பிறவிகளுக்கும் இனிமேல் எடுக்க வேண்டிய பிறவிகளுக்கும் காரணமான கர்ம வினைக் கணக்குகளை நீக்கி,

  • வரி 4

    முக்தி அடைவதற்கான பெரு வழியாக இருக்கின்ற இறைவனின் பேரொளி உருவத்தைக் காணும்படி செய்து அருள்வாள்.

திருமந்திரம் பாடல் #1374

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout